தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு பெண்ணேசுவரர் திருக்கோயில்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று பெண்ணேசுவர மடம் திருக்கோயிலாகும். மிக உயர்ந்த இராஜகோபுரம் இங்குள்ளது. இக்கோயில் மலைகள் சூழ்ந்த பகுதியிலும், தென்பெண்ணையாற்றங்கரையிலும் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்த இக்கோயில் பெண்ணை (பனை)யின் கீழ் அமர்ந்த நாயனார்க்காக எடுப்பிக்கப்பட்டது. பனை அதியர்களின் குலச்சின்னமாகும். பிற்காலச் சோழர்காலத்தில் இக்கோயில் கற்றளியாக எடுப்பிக்கப்படும் முன்னரே அதியர்கள் இங்கு வழிபாடு மேற்கொண்டிருக்க வேண்டும். இக்கோயிலைச் சுற்றிலும் நடுகல் சிற்பங்களும், தலைப்பலி சிற்பங்களும் காணப்படுகின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:30(இந்திய நேரம்)
சந்தா RSS - பெண்ணேசுவர மடம்