தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு சிவபுரம் சிவன் திருக்கோயில்

காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் சுங்குவார் சத்திரம் செல்லும் வழியில் சிவபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவபுரம் சோழர்கள் காலத்தில் உரோகடம் என்றழைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தாங்குதளம் முதல் கலசம் வரை முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ள இக்கற்றளி வேசர பாணியில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். இங்குள்ள இறைவனை இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர் என்று இக்கோயில் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:30(இந்திய நேரம்)
சந்தா RSS - சிவபுரம்