அருள்மிகு மலையடிப்பட்டி சிவன் திருக்கோயில்
சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், சங்கரநாராயணர், கொற்றவை, சப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
- பார்வை 343