தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு சந்திரப்ரபா (சந்திரநாதர்) திருக்கோயில்

திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரைலோக்யநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னனாகிய இராஜசிம்மன் (கி.பி.690-728) காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என அறியப்படுகிறது. இக்கோயில் கி.பி.8-ஆம் நூற்றாண்டிற்குரிய கட்டட கலையம்சங்களை ஆங்காங்கே கொண்டு விளங்குகிறது. இராஜசிம்மன் தன்னுடைய கைலாசநாதர் கோயிலில் முந்நூறு பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளான். அவன் எல்லா சமயங்களையும் ஆதரித்துள்ளான் என்பதற்கு இந்தப் பெயர்களே சாட்சியாக விளங்குகின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:40(இந்திய நேரம்)
சந்தா RSS - சந்திரப்ரபா கோயில்