தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு அம்பை காசிபநாதர் திருக்கோயில்

திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, வசந்த மண்டபத் தூண் சிற்பங்கள், பள்ளியறை மணியடி மண்டபத் தூண் சிற்பங்கள், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம், மரக்கதவில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் ஆகிய சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. இறைவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி கருவறைகள் அமைந்துள்ளன. இராஜகோபுர பணி நடைபெற்று வருகிறது. இறைவன் சதுரமான கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:43(இந்திய நேரம்)
சந்தா RSS - காசியபநாதர் கோயில்