அருள்மிகு திருபுவனை ஸ்ரீதோதாத்ரிநாத வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
முதலாம் பராந்தகச் சோழனால் முற்காலச் சோழர் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் பெருமாளுக்கு எடுப்பிக்கப்பட்டதாகும். வீரநாராயண விண்ணகரம் என்ற பெயர் கொண்ட இத்தலம் பராந்தகனின் பட்டப்பெயரான வீரநாராயணன் என்ற பெயரில் விளங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூர் திருபுவனை மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது. நான்கு வேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ஊரே சதுர்வேதி மங்கலமாகும். அவ்வகையில் இவ்வூர் பிரம்மதேயமாகும். இவ்வூரில் பராந்தகன் காலத்தில் ஒரு ஏரி வெட்டப்பட்டுள்ளது.
- பார்வை 2469