அருள்மிகு நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில்
சோழமன்னன் கோச்செங்கணான் காவிரிக்கரையின் இருமருங்கிலும் கட்டிய 70 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. திருக்குறுந்தொகையிலும், திருத்தாண்டகத்திலும் அப்பர் பெருமான் நன்னிலம் கோயிலைக் கூறியுள்ளார். சுந்தரர் நன்னிலம் பெருங்கோயில் நயந்தவனே என்று இக்கோயில் இறைவனை தமது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இயற்கை எழில் சூழ்ந்த நன்னிலம் நீர்வளத்திலும் சிறந்து விளங்கிய காவிரித்துறையாகும். இந்த நல்ல நிலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனைச் சுற்றி சோலைகள் அமைந்துள்ளன. அச்சோலைகளில் உள்ள மலர்களைச் சேகரிக்கும் வண்டுகள் இக்கோயிலில் கூடுகட்டி வாழ்கின்றன.
- பார்வை 1195