அருள்மிகு திருச்சோற்றுத்துறை ஓதணவனேஸ்வரர் திருக்கோயில்
திருச்சோற்றுத்துறை திருவாரூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலமாகும். சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றுள்ளது. இக்கோயிலில் உள்ள ஏழுகன்னியர் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் கலையழகு மிக்கவையாக இங்கு அமைந்துள்ளன. அய்யனார் சிற்பம் தனிச் சிறப்புடையது. நடுகல் வீரனது சொர்க்கம் செல்லும் காட்சி பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. இப்பலகைக் கல் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. நாற்கரமாக நாகரபாணியில் அமைந்த இக்கோயில் எளிய வடிவமைப்புடையது.
- பார்வை 1272