அருள்மிகு திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில்
தற்போது கண்டியூர் என இவ்வூர் வழங்கப்பட்டாலும் இவ்வூர் பாடல்பெற்றத் தலமாகையால் திரு என்ற முன்னொட்டினைப் பெற்று திருக்கண்டியூர் எனவும் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த தலங்களுள் ஒரு தலமாதலால் திருக்கண்டியூர் வீரட்டானம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. கண்டனபுரம், ஆதிவில்வாரண்யம், பிரமபுரி என்ற சில புராணப்பெயர்கள் கொண்டும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தினமும் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி மூலவர் மீது படுகிறது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் கல்வெட்டே காலத்தால் முற்பட்டதாகும்.
- பார்வை 1628