அருள்மிகு தஞ்சை கொங்கணீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர் மேலராஜவீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது. கொங்கணச் சித்தர் நிறுவிய கொங்கணேசுவரர் இங்கு அருள்பாலிக்கிறார். இங்கு சில கல்வெட்டுகளும், இரண்டாம் ஏகோஜி மன்னரின் இரண்டு செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மகாத்மியம் என்னும் ஏட்டுப்பிரதிகளில் உள்ள பவிஷ்யோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக கொங்கண முனிவர் வழிபட்ட கொங்கணேசுவரர் பற்றிக் கூறப்பட்டுள்ளன. கொங்கணர் கடைக்காண்டம், திரிகாண்டம், ஞானகுளிகை ஆகிய வைத்திய நூல்களை இயற்றியவர்.
- பார்வை 1833