Aranoolgal-I-ஆசாரக் கோவை
5.1 ஆசாரக்கோவை
ஆசாரக் கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி
என்பது பொருளாம். இந்த நூலினுள் ஆசார வித்து (1),
ஆசாரம் எப்பெற்றியானும் படும் (96), ஆசாரம் வீடு பெற்றார்
(100) என்று வரும் இடங்களில் ஆசாரம் என்ற சொல்
ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.
இந்த நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்.
- பார்வை 5