சான்றிதழ்க் கல்விக்கான அனைத்துப் பாடங்களும் இணையவழிப் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்திக் கற்பதற்கு எளிய, முறையில், ஆர்வம் ஊட்டும் வகையில் வழங்கப்படுகின்றன. இப்பாடங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
AM00 அகரம் (1 & 2 ஆம் வகுப்புக்கு நிகரானது)
எழுத்துகள் அறிமுகம், சொற்களைக் கற்றல், சிறு தொடர் கற்றல், எழுதும் பயிற்சி, மழலைப் பாடல்கள், அறநெறிக் கதைகள், எளிய இலக்கணம் முதலான பாடப்பொருண்மைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் உறவுமுறைப் பெயர்கள் மட்டுமல்லாது, நமது அன்றாட வாழ்விலும் வகுப்பறையிலும் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் பெயர்களையும். நம்மைச் சுற்றிக் காணும் பொருள்களான மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், கனிகள், மின்பொருள்கள், போக்குவரத்து ஊர்திகள் போன்றவற்றின் பெயர்களையும் தமிழில் கேட்கவும், பேசவும், படிக்கவும், எழுதவும் பயிற்சிகள் அளிக்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாடஎண் | பாடப்பொருள் / இலக்கணம் / மொழிப்பயிற்சிகள் |
1 | உயிர் எழுத்துகள் ( அ-ஊ) |
2 | உயிர் எழுத்துகள் (எ-ஔ) ஆய்த எழுத்து (ஃ) |
3 | மெய் எழுத்துகள் (க்-ப்) |
4 | மெய் எழுத்துகள் (ம்-ன்) |
5 | உயிர்மெய் எழுத்துகள் (க-னீ) |
6 | உயிர்மெய் எழுத்துகள் (கு–னே) |
7 | உயிர்மெய் எழுத்துகள் (கை-னௌ) |
8 | உறவு முறை |
9 | ஓரெழுத்துச் சொல், ஈரெழுத்துச் சொல் |
10 | எண்ணுப்பெயர்கள், வடிவங்கள் |
11 | எளிய இலக்கணம் - மூவிடப்பெயர் |
12 | எளிய இலக்கணம் - ஒலி வேறுபாட்டுச் சொற்கள் (மயங்கொலிகள்) |
13 |
எளிய இலக்கணம் - பெயர்ச்சொல், வினைச்சொல் பெயரடை, வினையடை |
14 | எளிய இலக்கணம் - வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு) |
15 | மீள்பார்வை பயிற்சிகள் |
17 | மரபு விளையாட்டுகள் |
இன எழுத்துகள் | |
18 | கிழமைகள் |
வினா எழுத்துகள் | |
19 | தமிழ் மாதங்கள் |
திணை, பால் | |
20 | திசைகள் |
21 | விழாக்கள் |
எண்ணுப்பெயர்கள் | |
22 | தமிழர் உணவுகள் |
சுட்டு எழுத்துகள் | |
23 | பூக்கள் |
ஒருசொல் பல பொருள் | |
24 | உடல் உறுப்புகள் |
25 | பழங்கள் |
பல சொல் ஒரு பொருள் | |
26 | காய்கறிகள் |
காலம் | |
27 | விலங்குகள் |
எதிர்ச்சொற்கள் | |
28 | நிறங்கள் |
29 | பறவைகள் |
வேற்றுமை உருபுகள் | |
30 | தாவரங்கள் |
இரண்டு, மூன்று சொல் கொண்ட தொடர்கள் | |
31 | மீள்பார்வை பயிற்சிகள் |
IM00 இகரம் (3, 4 & 5 ஆம் வகுப்புக்கு நிகரானது)
அகரத்தின் தொடர்ச்சியாக இகரம், உகரம், ழகரம், சிகரம் என அடுத்தடுத்த நிலைகளுக்கு மொழி, நாடு, சமூகம், இயற்கை, கல்வி, தொழில், கலை, பண்பாடு, அறிவியல், தொழில் நுட்பம், அறம், நல்வாழ்வு, ஆளுமை, மனிதநேயம் என்ற பொருண்மைகளின் அடிப்படையிலும் உரைநடைப் பகுதியும், சொல், தொடர், இலக்கணம், பொருள் ஆகிய மொழிக் கூறுகளை மையப்படுத்தி இலக்கணத்தையும் கொண்டு பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், சொற்றொடர் உருவாக்குதல், பொதுச் செய்திகளை அறிந்துகொள்ளும் வகையில் தகவல்துளி, மொழிபெயர்ப்பு, படைப்பாற்றல் முதலானவற்றில் பயிற்சி பெறும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாடஎண் | பொருண்மை | பாடப்பொருள்/ இலக்கணம் |
1 | மொழி | தமிழ்த்தாத்தா உ.வே.சா |
இடைச்சொற்கள் | ||
2 | ஷேக்ஸ்பியர் | |
மரபுத்தொடர்கள் | ||
3 | நாடு | தமிழர் வீரம் |
திணை | ||
4 | கடற்பயணம் | |
இணைமொழிகள் | ||
5 | சமூகம் | தமிழர் ஆடை, அணிகலன் |
பால் | ||
6 | ஹெலன் கெல்லர் | |
ண, ந, ன ஒலிவேறுபாடு | ||
7 | இயற்கை | வனவிலங்குப் பாதுகாப்பு |
ஒருமை, பன்மை | ||
8 | திருக்குற்றாலக் குறவஞ்சி | |
எண்ணுப்பெயர்கள் | ||
9 | கல்வி | கல்வியே அழியாச் செல்வம் |
பெயரெச்சம், வினையெச்சம் | ||
10 | மதிநுட்பம் | |
ர, ற ஒலிவேறுபாடு | ||
11 | தொழில் | தொழில்கள் |
பெயரடை, வினையடை | ||
12 | வேளாண்மை | |
ல, ள, ழ ஒலிவேறுபாடு | ||
13 | கலை | சித்தன்னவாசல் |
வினாச்சொற்கள் | ||
14 | பறையிசைக் கருவி | |
இரு சொல், மூன்று சொல் தொடர்கள் | ||
|
|
மீள்பார்வை - பயிற்சிகள் |
17 | பண்பாடு | தமிழர் விருந்தோம்பல் |
வேற்றுமை (1-4) | ||
18 | உலகப் பழமொழிகள் | |
மரபு (பெயர், ஒலி) | ||
19 | அறிவியல் | சக்கரம் |
வேற்றுமை (5-8) | ||
20 | கலீலியோவும் ஜேம்ஸ்வாட்டும் | |
உவமைத்தொடர்கள் | ||
21 | தொழில் நுட்பம் | கணினி |
ஒரு சொல் பல பொருள் | ||
22 | தன்னிகரில்லாத் தாரா | |
மரபுத்தொடர்கள் | ||
23 | அறம் | அன்பே அறம் |
பல சொல் ஒரு பொருள் | ||
24 | கைலாஷ் சத்தியார்த்தி | |
இணைமொழிகள் | ||
|
|
மீள்பார்வை - பயிற்சிகள் |
25 | நல்வாழ்வு | உடல்நலம் காக்கும் உணவுகள் |
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் | ||
26 | நல்ல பழக்கவழக்கங்கள் | |
எண்ணுப்பெயர்கள் | ||
27 | ஆளுமை | கல்விக்கண் திறந்த காமராசர் |
தொடரமைப்பு | ||
28 | சார்லி சாப்ளின் | |
நிறுத்தக்குறிகள் | ||
29 | மனிதநேயம் | மனிதநேயமிக்க சுகந்தி |
செய்வினை, செயப்பாட்டுவினை வினைத் தொடர்கள் |
||
30 | மனிதம் போற்றும் மரியா | |
நான்கு சொல் கொண்ட தொடர்கள் | ||
|
|
மீள்பார்வை – பயிற்சிகள் |
UM00 உகரம் (6, 7 & 8 ஆம் வகுப்புக்கு நிகரானது)
இந்நிலையில், தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழர் வாழ்வியல், மரபு, பண்பாடு, நாட்டுப்புறக் கலைகள், புகழ்பெற்ற தமிழறிஞர்கள் போன்ற செய்திகள் பாடப்பொருண்மைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
இகரம் நிலை பாடங்களின் தொடர்ச்சியாகவும், ழகரம் நிலை பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாடஎண் | பொருண்மை | பாடப்பொருள்/ இலக்கணம் |
1 | மொழி | செம்மொழித்தமிழ் |
பெயர்ச்சொல் (பொருள், இடம், காலம்) | ||
2 | இணையத்தில் தமிழ் | |
மரபுத்தொடர்கள் | ||
3 | நாடு | புறநானூற்றில் மேலாண்மைத்திறன் |
பெயர்ச்சொல் (சினம், குணம், தொழில்) | ||
4 | வீரச்சிறுவன் | |
இணைமொழிகள் | ||
5 | சமூகம் | தமிழர் உணவுப் பழக்க வழக்கங்கள் |
பெயரெச்சம் | ||
6 | மாமனிதர் | |
ஒலி வேறுபாட்டுச் சொற்கள் (ண, ந, ன) | ||
7 | இயற்கை | தமிழர் வாழ்வில் இயற்கைக் கூறுகள் |
வினையெச்சம் | ||
8 | நீர் மேலாண்மை | |
இணைமொழிகள் | ||
மீள்பார்வை | ||
9 | கல்வி | உலக நூலகங்கள் |
ஒரு சொல் பல பொருள் | ||
10 | கல்வியின் சிறப்பு | |
ஒலி வேறுபாட்டுச் சொற்கள் (ர, ற) | ||
11 | தொழில் | பழந்தமிழர் வாணிகம் |
பல சொல் ஒரு பொருள் | ||
12 | உலகத் தொழில் கண்காட்சி | |
மரபுத் தொடர்கள் | ||
13 | கலை | சிலம்பாட்டம் |
ஒலிவேறுபாட்டுச் சொற்கள் (ல, ழ, ள) | ||
14 | சிலை சொல்லும் கதை | |
தொடர் அமைத்தல் | ||
மீள்பார்வை | ||
17 | பண்பாடு | கீழடி நம் தாய்மடி |
இடைச்சொற்கள் | ||
18 | ஜப்பான் நாட்டின் பண்பாட்டுச் சிறப்புகள் | |
மரபுத்தொடர்கள் | ||
19 | அறிவியல் | தமிழரின் அறிவியல் சிந்தனை |
பெயரெச்ச வகைகள் | ||
20 | என் முதல் விண்வெளிப் பயணம் | |
இரட்டுறமொழிதல் (சிலேடை) | ||
21 | தொழில் நுட்பம் | செயலிகள் |
வினையெச்ச வகைகள் | ||
22 |
சமூக ஊடகமும் இணையப் பாதுகாப்பும் |
|
ஒலி வேறுபாட்டுச் சொற்கள் | ||
23 | அறம் | ஆராய்ச்சி மணி |
வேற்றுமை | ||
24 | அன்பு என்னும் அறம் | |
உவமைத்தொடர்கள் | ||
மீள்பார்வை – பயிற்சிகள் | ||
25 | நல்வாழ்வு | மூலிகை மருத்துவம் |
வழுநிலை, வழாநிலை | ||
26 | உடல்நலம் காப்போம் | |
கருத்து மாறாத் தொடர்கள் | ||
27 | ஆளுமை | சீர்திருத்தச் செம்மல் |
வழாநிலைத் தொடர்கள் | ||
28 | கேள்வி என்னும் கலை | |
தொகைச்சொற்கள் | ||
29 | மனிதநேயம் | வள்ளலாரின் வாழ்வியல் நெறி |
புணர்ச்சி | ||
30 | அன்னை தெரசாவின் அருள் உள்ளம் | |
தொடர் உருவாக்குதல் | ||
மீள்பார்வை – பயிற்சிகள் |
LM00 ழகரம் (9 & 10 ஆம் வகுப்புக்கு நிகரானது)
தமிழரின் உயரிய சிந்தனை, உறவின் மேன்மை, சமூகப் பொறுப்பு முதலானவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கில் இப்பாடநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தமிழ் மொழியில் உள்ள தொடர் வகைகள், வல்லினம் மிகும் / மிகா இடங்கள் முதலான இலக்கணங்களை எளிமையாகக் கற்கும் வகையிலும், உகரம் நிலை பாடங்களுக்கான தொடர்ச்சியாகவும், சிகரம் நிலை பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாட எண் | பொருண்மை | பாடப்பொருள்/ இலக்கணம் |
1 | மொழி | ஷெல்லியும் பாரதியும் |
பெயரெச்சம் | ||
2 | விசாரிப்பு (சிறுகதை) | |
மரபுத்தொடர்கள் | ||
3 | நாடு | தமிழரின் உயரிய சிந்தனை |
வினையெச்சம் | ||
4 | வேற்றுமையில் ஒற்றுமை | |
இணைமொழிகள் | ||
5 | சமூகம் | உறவின் மேன்மை |
வினை வகைகள் | ||
6 | சமூகப் பொறுப்பு | |
நிறுத்தக்குறிகள் | ||
7 | இயற்கை | மாசிலா உலகம் படைப்போம் |
ஒரு சொல் பல பொருள் | ||
8 | சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் | |
மரபுத்தொடர்கள் | ||
மீள்பார்வை | ||
9 | கல்வி | நன்னூல் கூறும் ஆசிரியர் இயல்புகள் |
மூவகை மொழி | ||
10 | உலகக் கல்வியாளர்கள் | |
பல சொல் ஒரு பொருள் | ||
11 | தொழில் | உலகளாவிய தொழிற்புரட்சி |
உவமைத்தொடர்கள் | ||
12 | சிறந்த தொழில் முனைவோர்கள் | |
தன்வினை - பிறவினை | ||
13 | கலை | தமிழர் கட்டடக் கலை |
கருத்து மாறாத் தொடர்கள் | ||
14 | லுட்விக் வான் பீத்தோவன் | |
நான்கு சொல் கொண்ட தொடர்கள் | ||
மீள்பார்வை | ||
17 | பண்பாடு | தமிழரின் அடையாளம் - பொருநை |
தெரிநிலைப் பெயரெச்சம் | ||
18 | கொடைப்பண்பு (வில்லுப்பாட்டு வடிவம்) | |
தெரிநிலை வினையெச்சம் | ||
19 | அறிவியல் | அறிவியல் புனைகதை |
வினைமுற்று | ||
20 | உயிர்காக்கும் வங்கிகள் | |
இரட்டுற மொழிதல் | ||
21 | தொழில் நுட்பம் | இயற்கை மொழி ஆய்வு |
வேற்றுமைத்தொகை | ||
22 | தமிழரின் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம் | |
உவமைத்தொடர்கள் | ||
23 | அறம் | மனத்துக்கண் மாசிலன் ஆதல் (சிறுகதை) |
வழுவமைதி | ||
24 | அறநூல்கள் | |
வல்லினம் மிகா இடங்கள் | ||
மீள்பார்வை | ||
25 | நல்வாழ்வு | உடல்நலம் காப்போம் |
திணை, பால், எண், இடம், காலம் காட்டும் விகுதிகள் | ||
26 | உயிர் காத்த மருத்துவர் (வானொலி உரைச்சித்திரம்) | |
வல்லினம் மிகும் இடங்கள் | ||
27 | ஆளுமை | ஆபிரகாம் பண்டிதர் |
புணர்ச்சி இலக்கணம் | ||
28 | கண்டுபிடிப்புகளின் பேரரசன் | |
தொடர் வகைகள் | ||
29 | மனிதநேயம் | மணிமேகலை |
நேர்க்கூற்று – அயற்கூற்று | ||
30 | ஜீன் ஹென்றி டுனாண்ட் | |
ஆறு சொல் கொண்ட தொடர்கள் | ||
மீள்பார்வை |
CM00 சிகரம் (11 & 12 ஆம் வகுப்புக்கு நிகரானது)
தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய வளங்கள் எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்தும். இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியின் இலக்கிய கருத்துகள், இலக்கணக் கூறுகள் முதலானவற்றை பாடப்பொருண்மைகளாகக் கொண்டு சிகரம் நிலைக்கான பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் படைப்புகளைத் தமிழ் மொழியில் வெளியிட ஆர்வமூட்டும் வகையிலும் பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாடஎண் | பொருண்மை | பாடப்பொருள்/ இலக்கணம் |
1 | மொழி |
தமிழ்விடு தூது தமிழரின் கொடைத்தன்மை |
மொழிமுதல் எழுத்துகள் | ||
2 |
பாரதிதாசன் கவிதைகள் உலகத் தமிழ் மாநாடு |
|
மொழியிறுதி எழுத்துகள் | ||
3 | நாடு |
திருக்குறள் கம்பராமாயணம் காட்டும் நாட்டுவளம் |
இலக்கண வகைச் சொற்கள் | ||
4 |
நாடு பிரேசில் |
|
இலக்கிய வகைச் சொற்கள் | ||
5 | சமூகம் |
தனிப்பாடல் பண்படுத்தும் பழமொழிகள் |
வல்லினம் மிகும் இடங்கள் | ||
6 | பூமியின் முற்றம் முழுவதும் சுற்றம் ஆதிச்சநல்லூர் | |
வல்லினம் மிகா இடங்கள் | ||
7 | இயற்கை |
முத்தொள்ளாயிரம் கடல்சார் வாழ்வியல் |
எழுத்துப்போலி | ||
8 |
பூக்கும் மரங்களின் ரகசியம் இயற்கைப் பாதுகாப்பு |
|
பகுபதம், பகாபதம் | ||
மீள்பார்வை | ||
9 | கல்வி |
சீவக சிந்தாமணி தமிழ் இலக்கியத்தில் கல்வியின் சிறப்பு |
பகுபத உறுப்புகள் | ||
10 |
கல்வி செழித்தால்…, வலைப்பூவில் பதிவேற்றம் |
|
மூவகை மொழி | ||
11 | தொழில் |
பட்டினப்பாலை தமிழரின் அயல்நாட்டு வணிகம் |
திணை, பால், எண், இடம் | ||
12 |
தொழிலின் சிறப்பு வாரன் எட்வர்ட் பஃபெட் |
|
வினையாலணையும் பெயர் | ||
13 | கலை |
சிலப்பதிகாரம் தெருக்கூத்து |
வழக்கு | ||
14 |
காஃபித் தோட்டப் பாட்டு, தமிழர் கூத்துக் கலைகள் - பொம்மலாட்டம் |
|
ஆகுபெயர் | ||
மீள்பார்வை | ||
17 | பண்பாடு |
கலித்தொகை சங்கப்புலவர் பண்பாடு |
தொகை நிலைத்தொடர்கள் | ||
18 |
தமிழோவியம் (தமிழ்ப்பண்பாடு) பேச்சரங்கம் நாடுகளும் நாகரிகங்களும் |
|
வேற்றுமைத்தொகை | ||
19 | அறிவியல் |
நீலகேசி தமிழர்களின் வானியல் அறிவு |
தொகாநிலைத்தொடர் | ||
20 |
விஞ்ஞானி ஏவுகணை நாயகர் |
|
வழுநிலை - வழாநிலை | ||
21 | தொழில் நுட்பம் |
மணிமேகலை இயற்கை மொழி ஆய்வு |
வழுவமைதி | ||
22 |
பாரத தேசம் திரைக்கலை நுட்பங்கள் |
|
புணர்ச்சி | ||
23 | அறம் |
செல்வ நிலையாமை போரில் அறம் |
வினை வகைகள் | ||
24 |
குருதிக் கொடை உலகளாவிய அறம் |
|
யாப்பிலக்கணம் (எழுத்து, அசை, சீர்) | ||
மீள்பார்வை | ||
25 | நல்வாழ்வு |
ஆசாரக்கோவை தமிழர் மருத்துவம் |
யாப்பின் உறுப்புகள் (தளை, அடி, தொடை) | ||
26 |
உடல்நலம் உலக மருத்துவ முறை |
|
பா வகைகள் அறிமுகம் | ||
27 | ஆளுமை |
புறநானூறு இராஜேந்திர சோழன் |
அணியிலக்கணம் | ||
28 |
வள்ளுவம் பத்து அமர்த்தியா சென் |
|
அணிகள் | ||
29 | மனிதநேயம் |
நான்மணிக்கடிகை மனிதநேயர் லேமா ராபர்ட்டா குபோவீ |
குறியீடு- படிமம் - தொன்மம் | ||
30 |
ஆசிய ஜோதி வள்ளுவர் காட்டும் மனிதநேயம் |
|
வேர்ச்சொல் | ||
மீள்பார்வை |
மேற்காணும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் பாடத்திட்டங்கள் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் இணையம் வழியாக தமிழ் கற்பதற்கு ஏதுவான பாடத்திட்டம் எனப் பள்ளிக் கல்வித் (கஆப) துறை அரசாணை (ப) எண்.254, நாள்.27.12.2024இல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாணையைக் காண இங்கே சுட்டுக.
- பார்வை 20