சான்றிதழ்க் கல்வியில் தமிழ்நாடு அரசு கல்வித் திட்டத்தின் படி 1 முதல் 12ஆம் வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித் திறன்களை வளர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்சான்றிழ்க் கல்வி பின்வரும் ஐந்து நிலைகளில் வழங்கப்படுகிறது.
- AM00 அகரம் (1 & 2ஆம் வகுப்புக்கு நிகரானது)
- IM00 இகரம் (3, 4 & 5ஆம் வகுப்புக்கு நிகரானது)
- UM00 உகரம் (6, 7 & 8 ஆம் வகுப்புக்கு நிகரானது)
- LM00 ழகரம் (9 & 10 ஆம் வகுப்புக்கு நிகரானது)
- CM00 சிகரம் (11 & 12 ஆம் வகுப்புக்கு நிகரானது)
1. சேர்க்கைத் தகுதி
- சான்றிதழ்க் கல்வியில் சேர்வதற்கு முன்தகுதி தேவை இல்லை. ஆனால் குறைந்தபட்ச வயது வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
வ.எண் பாடத்திட்டம் குறைந்தபட்ச வயது வரம்பு 1. AM00 அகரம் 5 வயது 2. IM00 இகரம் 7 வயது 3. UM00 உகரம் 10 வயது 4. LM00 ழகரம் 13 வயது 5. CM00 சிகரம் 15 வயது - மாணவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப சான்றிதழ்க் கல்வியின் எந்த நிலையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.
2. மாணவர் பதிவு
மாணவராகச் சேர இங்குச் சுட்டவும்
மாணவர் விவரம் காண இங்குச் சுட்டவும்
3. சான்றிதழ்க் கல்வியின் கால அளவு
- சான்றிதழ் நிலை ஒவ்வொன்றையும் இரு பருவங்களில் (ஓர் ஆண்டில்) முடிக்கின்ற வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- மாணவர்கள் அவரவர் திறமைக்கு ஏற்ப குறைந்தபட்ச வயது வரம்பை நிறைவு செய்திருப்பின் எப்பொழுது வேண்டுமானாலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
4. பாடத்திட்டமும் மதிப்பீட்டு முறையும்
சான்றிதழ்க் கல்விக்கான பாடத்திட்டமும் மதிப்பீட்டு முறையும் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன :
- பாடத்திட்டத்தைக் காண இவ்விணைப்பைச் சுட்டுக.
- மதிப்பீட்டு முறை
மதிப்பீட்டு முறை | ||||||||
தாள் குறியீடு | நிலைகள் | படிக்க வேண்டிய கால அளவு (மாதம்) | வாய் மொழித் தேர்வு (மதிப் பெண்) | காட்சித் தேர்வு (மதிப் பெண்) | இணைய வழித்தேர்வு (மதிப் பெண்) | எழுத்துத் தேர்வு (மதிப் பெண்) | மொத்த மதிப்பு | மதிப்பு விழுக்காடு |
AM00 | அகரம் | 12 | 25 | 25 | - | 50 | 100 | 100% |
IM00 | இகரம் | 12 | - | - | 25 | 75 | 100 | 100% |
UM00 | உகரம் | 12 | - | - | 25 | 75 | 100 | 100% |
LM00 | ழகரம் | 12 | - | - | 25 | 75 | 100 | 100% |
CMOO | சிகரம் | 12 | - | - | 25 | 75 | 100 | 100% |
5.தேர்வு முறை
சான்றிதழ்க் கல்விப் பாடத்திட்டத்தில் பயில விரும்புவோர் அனைவரும் தேர்வுகளில் பங்கு பெற வேண்டிய கட்டாயம் இல்லை. தகுதிச் சான்றிதழ் வேண்டுவோர் மட்டும் சான்றிதழ்க் கல்வித் தேர்வுகளில் பங்கு பெறலாம்.
சான்றிதழ்க் கல்விக்கான தேர்வு முறைகள் நான்கு நிலைகளில் நடத்தப்படுகிறது. அவை :
(i) வாய்மொழித் தேர்வு (அகரம் மட்டும்)
(ii) காட்சித் தேர்வு (அகரம் மட்டும்)
(iii) இணையவழித் தேர்வு
(iv) எழுத்துத் தேர்வு
5.1 தேர்வு அமைப்பு
அகரத்திற்கு வாய்மொழித்தேர்வு, காட்சித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு என மூன்று நிலைகளிலும், பிற நிலைகளுக்கு இணையவழித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
- வாய்மொழித் தேர்வு
மாணவர்கள் ஆசிரியர்களால் கூறப்படும் எழுத்து மற்றும் சொற்களின் ஒலிப்பு முறைகளைக் கேட்டு, விடைகளைக் கூறுமாறு வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- காட்சித் தேர்வு
மாணவர்கள் ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்படும் படங்களைப் பார்த்து, அவற்றிற்கான விடைகளைக் கூறுமாறு வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இணையவழித்தேர்வு
இணையவழித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாக்களை வினாவங்கியிலிருந்து கணினியே தொகுத்து வழங்கும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நிறைவடைந்தபின் விடைகளைக் கணினியே திருத்தி மதிப்பெண்கள் வழங்கும்.
- எழுத்துத் தேர்வு
வினாக்களுக்கான விடைகளை விடைத்தாளில் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5.2 தேர்வு நடைமுறைகள்
- மாணவர்கள் அவர்கள் பதிவு செய்த தொடர்புமையங்கள் மூலமகவோ அல்லது சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்திலோ தேர்வுகளை எழுதலாம்.
- தேர்வுத் தொடர்பான அனைத்துப் பணிகளும் அந்தந்த தொடர்புமையங்களின் நிர்வாகிகளால் ஒருங்கிணைக்கப்படும்.
- தேர்வுகள் ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
- தேர்வுகளுக்கான வினாத்தாள் அமைப்பு மற்றும் மாதிரி வினாத்தாள்களைக் காண இங்கே சுட்டுக.
பா.நி. எண். | பாட நிலைகள் | வினாத்தாள் அமைப்பு | மாதிரி வினாத்தாள்கள் |
1. | AM00 அகரம் (வாய்மொழி, காட்சி மற்றும் எழுத்துத் தேர்வு) | அமைப்பு முறை | வினாத்தாள் |
2. | IM00 இகரம் (இணையவழி மற்றும் எழுத்துத் தேர்வு) | அமைப்பு முறை | வினாத்தாள் |
3. | UM00 உகரம் (இணையவழி மற்றும் எழுத்துத் தேர்வு) | அமைப்பு முறை | வினாத்தாள் |
4. | LM00 ழகரம் (இணையவழி மற்றும் எழுத்துத் தேர்வு) | அமைப்பு முறை | வினாத்தாள் |
5. | CMOO சிகரம் (இணையவழி மற்றும் எழுத்துத் தேர்வு) | அமைப்பு முறை | வினாத்தாள் |
6. கட்டண விவரம்
சான்றிதழ்க் கல்விக்கான தேர்வுக் கட்டண விவரங்களை அறிவதற்கு இங்கே சுட்டுக.
7. தேர்ச்சியும், தகுதிச் சான்றிதழும்
சான்றிதழ்க் கல்வியில் தேர்ச்சிப் பெற, அந்தந்த நிலைகளுக்கான தேர்வுகளில் பெறும் மொத்த மதிப்பெண்ணில் சராசரி மதிப்பெண் குறைந்தது 40 விழுக்காடு இருத்தல் வேண்டும்.
- பார்வை 31