பெயர்ச்சொல் 2 - வேற்றுமை
பாட அறிமுகம்
Introduction to Lesson
இப்பகுதி் 'வேற்றுமை' என்பதை அறிமுகம் செய்கிறது. தமிழில் வேற்றுமைகள் மொத்தம் எட்டு. வேற்றுமைகள் மற்ற எல்லா மொழிகளிலும் இதைவிடக் குறைவாகவே உள்ளன. வேற்றுமைகளின் அளவுகள் அதிகமாக இருப்பது தமிழ் மொழிக்கு ஒரு பெருமையே!
ஏதேனும் ஒன்றின் பெயராக அமைவது பெயர்ச்சொல். அந்தப் பெயர்ச்சொல் வேற்றுமை என்பதை ஏற்கும். அவ்வாறு ஏற்கும்பொழுது பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்பெறும்.