பெயர்ச்சொல் - ஆகுபெயர்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. ஆகுபெயர் என்றால் என்ன?
ஒன்றுக்கு வைக்கப் பெற்ற பெயர் வேறு ஒன்றுக்கு ஆகிவருவதை ஆகுபெயர் என்பர்.
2. ‘ஊரே வந்தது’ - என்ன ஆகுபெயர்?
‘ஊரே வந்தது’ என்பது இடவாகு பெயர் ஆகும்.
3. ‘காஞ்சிபுரம் மிக அழகு’ - என்ன ஆகுபெயர்?
‘காஞ்சிபுரம் மிக அழகு’ என்பது பொருளாகு பெயர் ஆகும்.
4. பண்பாகு பெயரை விளக்குக.
வீட்டிற்கு வெள்ளை அடித்தான் என்பதில் வெள்ளை என்பது சுண்ணாம்புக்கு ஆகி வருவதால் இது பண்பாகு பெயர் ஆகும்.
5. வற்றல் உண்டான் என்பதில் - ‘வற்றல்’ என்ன ஆகுபெயர்?
வற்றல் உண்டான் என்பதில் - ‘வற்றல்’ என்பது தொழிலாகு பெயர் ஆகும்.