பெயர்ச்சொல், வேற்றுமை, ஆகுபெயர்

பெயர்ச்சொல் - ஆகுபெயர்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  ‘ஊரே வந்தது’ - என்ன ஆகுபெயர்?

அ) இடவாகு பெயர்

ஆ) காலவாகு பெயர்

இ) பொருளாகு பெயர்

ஈ) சினையாகு பெயர்

அ) இடவாகு பெயர்

2.  ‘டிசம்பர் பூத்தது’ - என்ன ஆகுபெயர்?

அ) இடவாகு பெயர்

ஆ) காலவாகு பெயர்

இ) பொருளாகு பெயர்

ஈ) சினையாகு பெயர்

ஆ) காலவாகு பெயர்

3.  ‘வீட்டில் வெள்ளை அடித்தான்’ - என்ன ஆகுபெயர்?

அ) இடவாகு பெயர்

ஆ) காலவாகு பெயர்

இ) பொருளாகு பெயர்

ஈ) பண்பாகு பெயர்

ஈ) பண்பாகு பெயர்

4.  ‘தலைக்கு ஒரு மாம்பழம் கொடு’ - என்ன ஆகுபெயர்?

அ) இடவாகு பெயர்

ஆ) காலவாகு பெயர்

இ) பொருளாகு பெயர்

ஈ) சினையாகு பெயர்

ஈ) சினையாகு பெயர்

5.  ‘வற்றல் உண்டான்’ - என்ன ஆகுபெயர்?

அ) இடவாகு பெயர்

ஆ) காலவாகு பெயர்

இ) பொருளாகு பெயர்

ஈ) தொழிலாகு பெயர்

ஈ) தொழிலாகு பெயர்