தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
---|
|
TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
5.2 தமிழ் கற்பிப்பதற்கான பார்வை நூல்கள்
தமிழ் கற்பிப்பதற்கான பார்வை நூல்கள்
ஆசிரியர் கற்பிக்கப்புகும் ஒவ்வொரு பாடம் தொடர்பாகச் சிறப்பு, மிகைத் தகவல்களைத் தரும் நூல்கள் சிறப்புப் பார்வை நூல்கள் ஆகும். அவையனைத்தையும் பட்டியலிடுதல் இயலாது. மிகுதியும் பயன்படத்தக்க நூல்கள் கீழே பட்டியலிப்பட்டுள்ளன.
நூல் தலைப்பு இலக்கியம் | பதிப்பகம் |
---|---|
சங்க இலக்கியப் பேழை (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) திருக்குறள், பதினெண்கீழக்கணக்கு ஆகியன அடங்கிய பேழை) | சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் |
திருக்குறள் பரிமேலழகர் உரையும் குறிப்புரையும் | வசந்தா பதிப்பகம் |
கம்பராமாயணம் - 6 தொகுதிகள் | வை.மு.கோ. பதிப்பகம் |
தமிழ்நீதிச் செல்வம் | சாந்தா பப்ளிஷர்ஸ் |
செம்மொழிக் கல்வி (தமிழ்) | பி. இரத்தினசபாபதி சாந்தா பப்ளிஷர்ஸ் |
இலக்கணம் : இலக்கண விளக்கம் | இராச கோபாலச்சாரி ஸ்டார் பிரசுரம் |
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் | மணிவாசகம் நூலகம் |
நன்னூல் | சை.சி.நூ.ப. கழகம் |
1862ஆம் ஆண்டு வின்ஸ்லோ அவர்கள் தொகுத்த தமிழ் ஆங்கில அகராதியை மேலும் மேம்படுத்தித் தமிழ்ச் சொற்களஞ்சியமாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை டாக்டர் ஜி.யு. போப் அவர்களாலும் சர். பெர்டரிக் நிக்கல்சன் என்பவராலும் 1905ஆம் ஆண்டு வலியுறுத்தப்பட்டது. டாக்டர் போப் அவர்கள் தமிழ்ச் சொற்களைத் திரட்டி அவற்றிற்கு மொழியியல் அடிப்படையிலான விளக்கங்களைப் பெருமளவில் தயாரித்திருக்கிறார். 1907ஆம் ஆண்டு அவர் இயற்கையெய்தியமையால் தமிழ்ச் சொற்களஞ்சியப் பணியில் தேக்கம் ஏற்பட்டது. பின்னர் 1911ஆம் ஆண்டு அப்பணி சென்னை அரசாலும், பல்கலைக் கழகத்தாலும் புத்துயிர் பெற்றது. பல்வேறு தடைகளைத் தாண்டி இப்பணி 1935ஆம் ஆண்டு நிறைவு பெற்று ஆறு தொகுதிகளாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தால் தமிழ்ச் சொற்களஞ்சியம் வெளியிடப்பட்டது. அப்போது அவற்றின் பதிப்பாசிரியராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பணியாற்றினார். இவர் நான்காவது பதிப்பாசிரியராவார். இவருக்கு முன்னர் பதிப்பாசிரியர்களாகப் பணியாற்றியவர் மூவர். 1921ஆம் ஆண்டுவரை ஜெ.எஸ். சாண்டலர், 1926ஆம் ஆண்டுவரை அனந்த விநாயகம் பிள்ளை, 1926ஆம் ஆண்டுவரை சி.பி. வெங்கட்ராமன் என மூவர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களுக்கு முன்னர் தமிழ்ச் சொற்களஞ்சியம் பதிப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளனர்.
தமிழ்ச் சொற்களஞ்சியத் தொகுதிகள் 25 ஆண்டு காலப் பணியால் வெளிவந்தனவாகும். அவற்றிற்குப் பங்களித்த அறிஞர்கள் பலர். பணியைத் தொடங்கி வைத்தவர் டாக்டர் ஜி.யு. போப் அவர்கள் தயாரித்த பல குறிப்புகள் அவற்றுள் இடம் பெற்றுள்ளன. 'லெக்சிகன்' என வழங்கப்பெறும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் தமிழ்ச் சொற்களுக்குக் கீழ்க்கண்டவாறு விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
1. சொல், 2. சொல்லின் ஆங்கில ஒலிபெயர்ப்பு 3. இலக்கணப் பாகுபாடு 4. சொல்தோற்றம் 5. இனச்சொற்கள் 6. சொற்பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் 7. சொற்பொருளுக்கேற்ற இலக்கிய மேற்கோள். இவ்வேழு கூறுகளில் சில சொற்களுக்கு 4,5,7 என எண்ணிடப் பெற்ற கூறுகள் இடம் பெறா.
(அரித்தல் எனும் சொல்லுக்குரிய லெக்சிகன் விளக்கம்)
அரித்தல் : air, v.intr. To have an acitite itching sensation; தினவெடுத்தல் - v.tr. To feed, browse or eat away; மேய்தல், மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769)? To sift, separate the larget from smaller bodies, with the hand, with a sieve or riddle; கொழித்தெடுத்தல். சல்லடையால் சலித்தல் அரிக்கிறான். 3. To sweep up, gather – கூட்டுதல், சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை. 4. To wash away by waves on the bank or shore; நீர் அறுத்துச் செல்லுதல். அரித்தொழுகும் வெள்ளருவி (தேவா. 283, 3) 5. To separate by washing; நீரில் கழுவிப் பிரித்தல். 6. To gnaw as by white anits; பூச்சி தின்னுதல், கணச்சிதலரித்த (சிறுபாண். 133). 7. To vex by importuniry; இமிசித்தல். 8. To corrode, consume, as acids; துரு முதலியன தின்னுதல். (w) 9. To remove; நீக்குதல். (சீவக. 1769) 10. To create; படைத்தல். ஒங்குலகையரிந்து மளித்தும் 11. To intermit, inrerrupt; இடைவிடுதல் (அகநா.45).
மேற்கண்ட விளக்கத்தில் அரி-த்தல் எனும் சொல்லுக்குப் பதினொரு பொருள்கள் தரப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக, 1,04,405 தமிழ்ச் சொற்களுக்கு 6 தொகுதிகளாக உள்ள லெக்சிகனில் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது ஏழாம் தொகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.