முகப்பு

5.4 கருத்தரங்கம், பயிலரங்கம்

கருத்தரங்கம், பயிலரங்கம்

மாணவர்களிடையே தமிழ்க்கல்வியை வளர்க்கவும், ஆர்வத்தை தூண்டவும் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் வைப்பது இன்றியமையாததாக திகழ்கிறது. மாணவர்களின் திறன்களையும் திறமைகளையும் வெளிக்கொணர முடிகிறது. இதனால் புதியன படைக்கும் சிந்தனை ஆற்றல் வளர்கிறது.

கருத்தரங்க கற்பித்தல் முறை என்பது உயர்கற்றலுக்கான கற்பித்தல் உத்தியாகும். மனித இடைவினையுடைய உளவியல் கற்பித்தல் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட கற்பித்தல் முறைகளில் ஒன்றாக திகழ்கிறது.

“கருத்தரங்கில் குறிப்பிட்ட கருத்தில் கட்டுரை வழங்கப்பட்டு அதிலுள்ள ணிக்கலான கருத்துகளுக்கு குழு விவாதம் மூலம் திர்வு காணப்படும்” என்று சி.என்.ராஜா மற்றும் டி.பி.ராவ் (2004) கூறியுள்ளனர்.

கருத்தரங்கம் ஒரு முறைப்படுத்தப்பட்ட குழு விவாதத்திற்கு முன்னரோ பின்னரோ ஒரு முறையான விரிவுரை நிகழ்த்தப்படும் என்று சி.ஜே.குமார் மற்றும் டி.பி.ராவ் (2004) கருத்தரங்கத்தினை வரையறை செய்துள்ளனர்.

• கருத்தரங்க வகைகள்

கருத்தரங்க வகைகளை இணையத்தளத்தில் நான்கு வகையாக பிரித்துள்ளனர்.

  1. சிறு கருத்தரங்கம்
  2. பெரிய கருத்தரங்கம்
  3. தேசிய கருத்தரங்கம்
  4. பன்னாட்டுக் கருத்தரங்கம்
சிறு கருத்தரங்கம்

வகுப்பறையில் ஒரு சிறு பாடத்தலைப்பை விவாதம் செய்ய நடத்தப்படும் கருத்தரங்கம். ஒரு நிறுவனத்தில் பெரிய கருத்தரங்கம் நடத்தபடுவதற்கு முன் சிறு கருத்தரங்கம் நடத்தப்படல் வேண்டும்.

பெரிய கருத்தரங்கம்

ஒரு முதன்மை கருத்தில் துறை அல்லது நிறுவன சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கம். பெரிய கருத்தரங்கம் துறை நிலையில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை நடத்தப்படும். இதில் ஒரு குறிப்பிட்ட கருத்து பொதுவாக தேர்வு செய்யப்படுகிறது.

தேசிய கருத்தரங்கம்

ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பினால் தேசிய அளவில் நடத்தப்படுவது. கருத்தரங்கின் மையக்கருத்தில் புலமைப்பெற்ற வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள்.கருத்தரங்கின் கால அட்டவணை, கருத்து மற்றும் இடத்தை கருத்தரங்கின் செயலர் தயாரிக்கிறார்.

பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஒரு பன்னாட்டு அமைப்பினால் பொதுவாக நடத்தப்படும் கருத்தரங்கம். உலகநாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் நடத்தப்படுவது பன்னாட்டுக் கருத்தரங்கமாகும்.

• கருத்தரங்கக் குழு உறுப்பினர்கள்

கருத்தரங்கம் நடத்தப்படும். குழு உறுப்பினர்கள் பின்வருமாறு அமைந்திருப்பர்.

  • கருத்தரங்கின் தலைவர்
  • கருத்தரங்கின் அமைப்புச்செயலர்
  • கருத்தரங்கின் அமர்வுத்தலைவர்
  • கருத்தரங்கப் பேச்சாளர்
  • கருத்தரங்கப் பங்கேற்பாளர்
• கருத்தரங்க சிறப்பியல்புகள்
  • அறிவுசார் புலனின் பல்வேறு திறமைகள் வளர்க்கப்படுகிறது.
  • உளம் சார்ந்த பண்புகளை பங்கேற்பாளர்களிடத்தில் ஏற்படுத்த வழிவகுக்கிறது.
  • கருத்தரங்கக்குழு நடத்தை வழிமுறைகளை பங்கேற்பாளர்களிடம் வளர்க்கிறது.
  • கருத்தரங்க முறையில் தானே கற்றல் இடம் பெறுவதால் கற்றல் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.
  • மேன்மையான கற்பித்தல் மதிப்பை பெற்றுள்ளது.
• கருத்தரங்க முக்கியத்துவம்

கருத்தரங்கு என்ற சொல் ஆராய்ச்சிப் பேச்சை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது, இது பெரும்பாலும் வருகை தரும் ஆராய்ச்சியாளர் மற்றும் முதன்மையாக கல்வியாளர்கள், ஆராய்ச்சி ஊழியர்கள் மற்றும் முதுகலை மாணவர்களால் வழங்கப்படும். கருத்தரங்குகள் பெரும்பாலும் வழக்கமான தொடர்களில் நிகழ்கின்றன, ஆனால் ஒவ்வொரு கருத்தரங்கும் பொதுவாக அந்த பேச்சாளர் தேர்ந்தெடுக்கும் தலைப்பில் வெவ்வேறு பேச்சாளரால் வழங்கப்படுகிறது. இத்தகைய கருத்தரங்குகள் பொதுவாக ஒரு படிப்பின் ஒரு பகுதியாக இருக்காது, எனவே பொதுவாக எந்த மதிப்பீடு அல்லது கடனுடனும் தொடர்புபடுத்தப்படுவதில்லை.

சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில், கருத்தரங்கு ஒரு பெரிய விரிவுரைப் பாடமாக அமைந்துள்ளது, குறிப்பாக ஒரு புகழ்பெற்ற சிந்தனையாளரால் நடத்தப்படும் போது பார்வையாளர்களின் அளவு அல்லது கலந்துரையாடலில் மாணவர் பங்கேற்பின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

• கருத்தரங்கு அறைகள்

"கருத்தரங்கு அறை" என்பது ஒரு பொதுவான குழு ஆய்வு அல்லது நூலகத்தில் பணியிடத்திற்கான பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. [9] சில கருத்தரங்கு அறைகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பு, துறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது ஒரு கருத்தரங்கு படிப்பு அல்லது தனிப்பட்ட சுய-ஆய்வு நிகழ்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இடமாக திகழ்கிறது.

ஒருவகைக் கற்பித்தல் வழிமுறை பயிலரங்கு

ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர் அல்லது ஆசிரியர்க்கு அளிக்கக்கூடிய பயிற்சி பயிலரங்கம் எனப்படும். பிறகு அவர்கள் அப்பயிற்சியை கற்றுத்தேர்ந்தவுடன் சான்றிதழ் வழங்க வேண்டும். சான்றாக, கணினிப் பயன்பாடுக் குறித்த பயிற்சியை பயிலரங்கில் அளிக்கின்றபோது அதைக்குறித்த செய்முறை பயிற்சி அறிவை பயிலரங்கில் பங்கேற்பவர்களின் நடைமுறை, நுட்பங்கள் அல்லது பெற வேண்டும் ஏற்று நடத்துவது பயிலரங்கின் நோக்கமாகும்.

• பயிலரங்க அம்சங்கள்

பயிலரங்குகள் பெரும்பாலும் 6 முதல் 15 வரையிலான பங்கேற்பாளர்களைக் கொண்டு அமைக்கின்றன.

ஒவ்வொரு பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒரு துறை சார்ந்தவர்களுக்காக வடிவமைக்கப்படுகின்றது.

• பயிலரங்கு ஒருங்கிணைப்பு

ஒரு பயனுள்ள மற்றும் வெற்றிகரமான பயிலரங்கை நடத்துவதற்கு, அதன் திட்டமிடல், தயாரிப்பு மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் திட்டமிடும்போது, பயிலரங்கின் பார்வையாளர்கள், அதன் அளவு, அதன் நீளம், அதன் நோக்கம் மற்றும் உங்கள் விளக்கக்காட்சி விருப்பங்களைக் கவனியுங்கள். தயாரிப்பில் தளவாடங்கள் (சம்பந்தப்பட்ட பொருட்கள், உபகரணங்கள் போன்றவற்றை நிர்வகித்தல்) மற்றும் உளவியல் ரீதியாகவும் தயார்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

குறிப்பிட்ட கல்வி நிறுவனம் குறித்து தங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளும் முறையில் கலந்துரையாடலும் செயல்முறைப் பயிற்சியும் நடைபெறும் காலப்பகுதி பயிலரங்கு எனப்படும்.

எ.கா :

கணினியில் தமிழ் தட்டச்சு பயிற்சி, ஆசிரியர்களுக்கு அளிப்பதற்கு மூன்று நாள் அல்லது ஐந்து நாட்கள் தொடர்ந்து கணினித்தமிழ் பயிலரங்கம் ஒரு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ கணினி ஆய்வகத்தில் முறையாக பயிற்சி அளித்து வருவது பயிலரங்கம் ஆகும். இது மட்டுமல்லாமல் புதிய கல்வி மாற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி பயிலரங்கம் நடத்துவதால் அவர்கள் காலத்திற்கேற்ற அறிவைப் பெறுவர்.