முகப்பு

5.6 தொகுப்புரை

தொகுப்புரை

மொழிக்கற்றலில் மாணவர்களுக்கு உறுதுணையாக விளங்குகின்றன வளமூலங்கள் பலவகையாக கருதப்படுகின்றன. அம்மொழி வளக்கூறுகளைப் பற்றி தொடக்க வகுப்புகளில் சிலவற்றை மட்டும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன. சொல் நிலையிலும் மொழி நிலையிலும் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளன. நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியம் ஆகியன சொற்களஞ்சியத்தை வளர்கின்ற மிகச்சிறந்தப் பெட்டகமாகத் திகழ்கிறது. மொழித்திறனைப் பயன்படுத்தி தமிழ்க் கற்பிப்பதற்கான இலக்கிய, இலக்கண நூல்கள் பார்வைநூல்களாக உறுதுணைப்புரிந்தன. இலக்கிய திறனாய்வு குறித்த விழிப்புணர்வும் மாணவர்கள் பொதுவாக அறிந்து கொள்ளக் கூடிய கட்டுரைத் தகவல்களும் விளக்கப்பட்டுள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தில் கருத்தரங்கம், பயிலரங்கம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான உத்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தகவல்தொழில்நுட்பக் காலக்கட்டத்தில் கையடக்கத்தில் சொற்களஞ்சியப் பெருக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் அறிந்துகொள்ளவும் இணைய வலைத்தளப்பூக்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. திறனாய்வு நூல்கள் குறித்து எழுதுக.
  2. கருத்தரங்கம் என்றால் என்ன?
  3. பயிலரங்கம் பற்றி விரிவாக எழுதுக.
  4. வலைத்தளங்கள் குறித்து விளக்கி கூறுக.
  5. மின் அகராதி பயன்பாட்டை விவரிக்க.
  6. மின் நூலகப் பயன்பாட்டை விளக்குக.
  7. தமிழ் வளர்ச்சிக்கு வலைப்பூக்கள் ஆற்றும் பங்கினை விவரிக்க.