|
|
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
|
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
|
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
|
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
|
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
|
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
|
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
|
குன்ற நாடன் இரவினானே! |
உரை |
|
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|
|
மடலே காமம் தந்தது; அலரே |
|
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; |
|
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, |
|
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; |
5 |
எல்லாம் தந்ததன்தலையும் பையென |
|
வடந்தை துவலை தூவ, குடம்பைப் |
|
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, |
|
கங்குலும் கையறவு தந்தன்று; |
|
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? |
உரை |
|
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்
|
|
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
|
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர் |
|
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும் |
|
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி |
5 |
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, |
|
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து, |
|
உண்டல் அளித்து என் உடம்பே-விறல் போர் |
|
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி, |
|
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் |
10 |
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.-தனிமகனார்
|
|
கானமும் கம்மென்றன்றே; வானமும் |
|
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி, |
|
பல் குரல் எழிலி பாடு ஓவாதே; |
|
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த |
5 |
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை |
|
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது |
|
துஞ்சுதியோ-இல, தூவிலாட்டி!- |
|
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் |
|
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் |
10 |
வாரார் ஆயினோ நன்றே; சாரல் |
|
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும், |
|
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே? |
உரை |
|
இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது.- நல்லாவூர் கிழார்
|
|
''ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய், |
|
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய், |
|
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்! |
|
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்: |
5 |
கண்டோர் தண்டா நலத்தை-தெண் திரைப் |
|
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ? |
|
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ? |
|
சொல், இனி, மடந்தை!'' என்றனென்: அதன் எதிர் |
|
முள் எயிற்று முறுவல் திறந்தன; |
10 |
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே. |
உரை |
|
இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்.-பராயனார்
|
|
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம் |
|
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும், |
|
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!- |
|
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள் |
5 |
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால், |
|
பகல் வந்தீமோ, பல் படர் அகல! |
|
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி |
|
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்; |
|
பாடு இமிழ் விடர் முகை முழங்க, |
10 |
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே. |
உரை |
|
இரவுக்குறி மறுத்தது.-கண்ணங் கொற்றனார்
|
|
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் |
|
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து, |
|
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப |
|
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில், |
5 |
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், |
|
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் |
|
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட |
|
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை |
|
அம் பூந் தாது உக்கன்ன |
10 |
நுண் பல் தித்தி மாஅயோளே. |
உரை |
|
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்
|
|
அம்ம வாழி, தோழி! நம்வயின், |
|
யானோ காணேன்-அதுதான் கரந்தே, |
|
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே; |
|
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே- |
5 |
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி |
|
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி, |
|
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய் |
|
வேங்கை முதலொடு துடைக்கும் |
|
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே. |
உரை |
|
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|
|
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் |
|
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை, |
|
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை, |
|
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி, |
5 |
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல |
|
வளி சீத்து வரித்த புன்னை முன்றில், |
|
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய, |
|
''எழு'' எனின், அவளும் ஒல்லாள்; யாமும், |
|
''ஒழி'' என அல்லம் ஆயினம்; யாமத்து, |
10 |
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் |
|
சில் குடிப் பாக்கம் கல்லென |
|
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே! |
உரை |
|
தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.-கண்ணம்புல்லனார்
|
|
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும், |
|
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும், |
|
நும்மினும் அறிகுவென்மன்னே-கம்மென |
|
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை |
5 |
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், |
|
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி |
|
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி, |
|
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
10 |
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. |
உரை |
|