தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 2.4 தொகுப்புரை

  சித்தியின் மன்னன் சத்தியன் இந்திரை ஆகியோரின் மகனாய், சித்தியின் மன்னனாய், கௌரியின் கணவனாய் இருந்த சுத்தன் உலக நன்மைக்காக - அமைதிக்காகப் பல வீரர்களின் வரலாற்றையும், சமயத் தலைவர்களின் வரலாற்றையும் அச்சமயங்களின் தத்துவங்களையும் அறிந்தான். இமயம் சென்று சமயோக சமாஜம் கண்டு, யோக சித்திகளை அறிந்தான். தன் தொண்டர்களை உழைக்கவும் கடவுள் நெறியில் நிலைக்கவும் பணித்தான். உலகில் அரக்கத்தன்மை அழியவும் மக்கள் மொழி, மதம், இனம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து சமயோகத்தில் திளைக்கவும் வழிகாட்டினான். சுத்தனின் ஆன்மிகப் பயணம் உலக அமைதிப் பயணமாக நிறைவு பெறுகிறது எனலாம்.

  கலியன் மண்ணாசையால் தன் அண்ணன் சத்தியனைப் பகைத்தான். அவன் மகன் சுத்தனையும் பகைத்தான். மாவலியின் உதவி பெற்றுச் சித்தியைக் கைப்பற்றினான்; பின்னர் அதனை இழந்தான். தூமகேதுவால் சிறைப்பட்டான். நல்லறிவு பெற்று நல்லவனாய்த் திருந்திச் சுத்தனுக்கே ஆட்பட்டான்.

  மாவலி அரக்கன் தான் என்னும் அகங்காரத்தால் அடாதன செய்து இறுதியில் மனம் திருந்தி, சுத்தன் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டான்.

  அன்பும் பண்பும் அழகும் நிரம்பியவளாக, சுத்தனுக்கு ஏற்ற தூய மனைவியாக, அவன் உயிரோம்பத் தன் உயிரையே தியாகம் புரிந்த தூயவளாகக் கௌரி இக்காப்பியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளாள்.  


  தன்மதிப்பீடு : வினாக்கள் - II

  1.

  யார் யாரது வரலாற்று நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன?

  2.

  எத்தகைய அறிவியல் கருவிகள் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன?

  3.

  சுத்தானந்த பாரதியார் எத்தகைய புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-07-2017 15:20:46(இந்திய நேரம்)