தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏனியட்

  • பாடம் - 5

    A01145 ஏனியட்

    E     


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் இத்தாலியப் பெருங்காப்பியமான ஏனியட் பற்றிப் பேசுகிறது. ஏனியட், ட்ராய் நகரம் கிரேக்கர்களால் சீரழிக்கப்பட்டபோது ஏனியாஸ் என்னும் மாவீரன் இத்தாலியில் புதிய நகரையும் புகழ்மிக்க ரோமப் பேரரசையும் நிறுவிய அருஞ்செயலை விளக்குகிறது. ஏனியட் காப்பியத்தைப் படைத்த ஆசிரியர் வரலாறு, காப்பியம் எழுந்த காலச் சூழல், காப்பிய அமைப்பு, கதைச் சுருக்கம், கதைமாந்தர் ஆகியவை பற்றி இந்தப் பாடம் குறிப்பிடுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    உரோமப் பேரரசை நிறுவிய ஏனியாஸின் வீரதீரச் செயல்களைப் போற்றும் ஏனியட் காப்பியக் கதையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

     இம்மாபெரும் காப்பியத்தை இயற்றிய ஆசிரியர் வெர்ஜில் (Virgil) பற்றி அறிந்து கொள்ளலாம்.

     ஐரோப்பியக் காப்பியங்களின் போக்கைக் காணலாம். அவற்றைத் தமிழ்க் காப்பியங்களோடு ஒப்பிட்டும் அறியலாம்.

     ஒவ்வொரு தனிமனிதனின் செயல்களுக்குப் பின்னரும் கடவுளர் உள்ளனர் என்ற கருத்தையும் விதி மிகவும் வலிமை வாய்ந்தது என்னும் கதைக் கருவையும் வெர்ஜில் சித்திரித்துள்ள விதத்தைப் பற்றி அறியலாம்.

     ஏனியாஸ் என்னும் இளைஞன் எவ்வாறு பல இன்னல்களையும் கடந்து தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கைக்கான அடையாளத்தைத் தேடிச் செல்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

      உரோமானியர்களின் கடவுளர் பற்றியும் அவர்களது நம்பிக்கைகள் பற்றியும் அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 11:57:46(இந்திய நேரம்)