தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    1)

    பூங்கொடிக் காப்பிய ஆசிரியர் யார்? சிறு குறிப்புத் தருக.

     

    பூங்கொடிக் காப்பிய ஆசிரியர் கவிஞர் முடியரசன். இவருடைய இயற்பெயர் துரைராசு என்பதாகும். தனித்தமிழ் உணர்வால் உந்தப்பட்டுத் துரைராசு என்ற பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார்.

    முடியரசன் பாவேந்தர் பாரதிதாசனின் அடியொற்றிக் கவிதைகளைப் புனைந்தார். அதனால் இவரைப் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையில் முன்னணிக் கவிஞராகக் கொள்கின்றனர். தமிழ்மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றின் மேன்மைக்காக இடையறாது உழைத்தார்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-07-2017 13:13:10(இந்திய நேரம்)