Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1)
கடவுளர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பிற்கு இரு சான்றுகள் தருக.
கடவுளர்க்கும் தமிழுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவர் திருமழிசை ஆழ்வார். இவருடைய சீடர் கணிகண்ணன். இச்சீடர் பல்லவ மன்னனின் வேண்டுகோளை நிறைவேற்றாமையால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. எனவே கணிகண்ணனோடு திருமழிசை ஆழ்வாரும் புறப்பட அவர்களுக்குப் பின்னால் திருமால் திருமகளோடு பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு புறப்பட்டார்.
மற்றொரு நிகழ்ச்சி வருமாறு : திருவாசகத்தைத் திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் சொல்லச்சொல்லச் சிவபெருமான் தம் கைப்பட அதனை ஏட்டில் எழுதினார்.
இவ்விரு நிகழ்ச்சிகளும் கடவுளர்க்கும் தமிழுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புலப்படுத்தும்.