Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
மொழிக் கலப்புப் பற்றிய முடியரசன் கருத்து யாது?
தாய்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை மொழிக்கலப்பு என்பர். பிறமொழிச் சொற்களை நீக்கினால் தமிழ் வளராது. செம்பொன்னோடு செம்பு கலந்தால்தான் நல்ல அணிகலன்களை உருவாக்க முடியும். என்பர் சிலர். இக்கருத்தை முடியரசன் மறுக்கிறார். செம்பொன்னோடு அளவிற்கு அதிகமாகச் செம்பைக் கலந்துவிட்டால் அணிகலன்கள் செய்ய முடியாது என்பார் கவிஞர் முடியரசன். மேலும் அவர் தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் உடையது. அம்மொழியில் பிறமொழியைக் கலப்பது அமிழ்தத்தில் வெல்லத்தைக் கலப்பதற்கு ஒப்பாகும் என்று கூறுகிறார்.