தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை

    நிலைத்த பேரரசு ஏதுமில்லாத காலமாகப் பதினாறாம் நூற்றாண்டு அமைகிறது. பெரும்பாலும் புராணங்கள் இயற்றப்பட, சிற்சில நீதி நூல்களும், இலக்கண நூல்களும் தோன்றின. மடத்தின் ஆதரவில் வாழ்ந்த புலவர்களும் மடத்து தலைவர்களும் நூல்களை இயற்றியும் உரைகளை இயற்றியும் உள்ளனர். அகராதி நிகண்டு, சூளாமணி நிகண்டு என்ற இரு நிகண்டுகள் தோன்றியுள்ளன. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம், செவ்வைச் சூடுவாரின் பாகவதம், அதிவீரராம பாண்டியரின் நைடதம் என்பன குறிப்பிடத்தக்க நூல்கள். மணிப்பிரவாள நடையால் புகழ்பெற்ற பிள்ளை லோகாச்சாரி ஜீயர் இக்காலத்தவரே. மொத்தத்தில் வடமொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப் பெற்ற புராணங்களின் செல்வாக்கு இந்நூற்றாண்டில் மிகுந்து காணப்படுகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1

    கமலாலய புராணத்தை இயற்றியவர் யார்?

    2

    மாறன் அலங்காரம் என்ற நூலை இயற்றியவர் யார்?

    3

    மணிப்பிரவாள நடை எந்த அளவு முறைப்படி கூறப்படுகிறது?

    4

    மீனாட்சி சுந்தரம் பிள்ளை எந்த மடத்தால் ஆதரிக்கப்பட்டார்?

    5

    சூடாமணி நிகண்டு என்ற நூலை இயற்றியவர் யார்?

    6

    உலகநீதி என்ற நூலை இயற்றியவர் யார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-08-2017 17:16:30(இந்திய நேரம்)