Primary tabs
3.6 தொகுப்புரை
தமிழ் மொழியின் நீண்ட வரலாறு அறிய வேண்டிய ஒன்று. அவ்வரலாற்றினை அறிதற்குத் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள குகைக் கல்வெட்டுச் சான்றுகள், மன்னர் செதுக்கிய கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், பிறமொழியில் அமைந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், தமிழ் இலக்கண நூல்கள், பிறமொழியாளர் செய்த தமிழ் இலக்கணங்கள், இலக்கண உரைகள், இலக்கியங்கள், அயலார் குறிப்புகள் போன்றவை துணை புரியும் விதம் பற்றி இப்பாடத்தில் விளக்கப்பட்டது.
1.அரிக்கமேட்டில் கிடைத்த அகல் விளக்கில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது?2.தொல்காப்பியம் மூலம் தமிழ் எழுத்தின் வரிவடிவத்தைப் பற்றி அறிய வாய்ப்பு உள்ளதா?3.பிறமொழியாளர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்கள் இரண்டின் பெயர்களைத் தருக.4.இரண்டு இலக்கண உரையாசிரியர்களது பெயர்களைத் தருக.5.பேச்சுநடையில் அமைந்த இலக்கியங்கள் இரண்டின் பெயர்களைக் கூறுக.