தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0511-A05115 திராவிட மொழிகளும் தமிழும்

  • பாடம் - 5

    A05115 திராவிட மொழிகளும் தமிழும்

     

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் மொழிக் குடும்பங்களைப் பற்றிச் சொல்கிறது. திராவிட மொழிக்குடும்பம் பற்றி எடுத்துரைக்கிறது. அக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளையும், அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் பட்டியல் இடுகிறது. மூலத் திராவிடம் பற்றி விளக்கி, அதற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பையும் நெருக்கத்தையும் விளக்குகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • பல்வேறு மொழிகள் ஒரு குடும்பமாக அமைவதை அறிந்து கொள்ளலாம்.
    • திராவிட மொழிகள் எவை என்பதையும் அவை வழங்கும் நிலப்பகுதிகளையும் பற்றி அறியலாம்.
    • மூலத் திராவிடம் அல்லது தொல் திராவிடம் குறித்து விளக்கம் பெறலாம்.
    • தொல் திராவிடத்தின் கூறுகள் தமிழ் முதலிய மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    • தொல் திராவிடத்துக்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கம் பற்றித் தெளிவு பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:49:09(இந்திய நேரம்)