தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    சங்க காலத் தமிழுக்கும் இடைக்காலத் தமிழுக்கும் இடையே மாறுபாடுகள் பல உள்ளன. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பல மொழிக் கூறுகள் இடைக்காலத்தில் நிலைத்துவிட்டதைக் காண முடிகிறது. சோழர் காலத்துத் தமிழ் மொழியின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் இருந்தது. இலக்கிய, இலக்கண நூல்கள் தோன்றின. இவை மொழியின் சிறப்பை அறிய உதவுவனவாக விளங்குகின்றன. இவையேயன்றிக் கல்வெட்டுகள், சாசனங்கள் போன்றனவும் சோழர் காலத் தமிழ் மொழியின் பண்புகளை உணர்த்துவனவாக விளங்குகின்றன. தமிழ்மொழி அடைந்த மொழி மாற்றங்களையும், சோழர் காலத்துத் தமிழ் மொழியின் எழுத்தியல் தன்மைகளையும் கூறுவதாக இப்பாடம் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 16:54:42(இந்திய நேரம்)