தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மராட்டியர் காலத் தமிழ்

 • பாடம் - 6

  A05136 மராட்டியர் காலத் தமிழ்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் மராட்டியர் காலத் தமிழ்மொழியில் உண்டான மாற்றங்களைக் கூறுகிறது. பல்லவர், சோழர்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் சில மராட்டியர் காலத்தில் தொடர்ந்து வந்துள்ளன. மராட்டியர்களின் தொடர்பால் தமிழில் ஏற்பட்ட ஒலி மாற்றங்கள், இலக்கண மாற்றங்கள் மட்டுமன்றி அக்காலத்து இலக்கியங்களில் காணப்படும் பேச்சுவழக்குச் சொற்களின் ஆதிக்கத்தையும், பிறமொழிச் சொற்களின் தாக்கத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது இப்பாடம்.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:

  மராட்டியர் காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்கள் பற்றிய செய்திகளையும், மொழியை அறிய உதவக் கூடிய பிற ஆதாரங்களான கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் போன்றவற்றின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
  மராட்டியர் கால ஆட்சியின் போது தமிழ் மொழியில் ஏற்பட்ட உயிரொலி, மெய்யொலி மாற்றங்களைச் சான்றுகளுடன் புரிந்து கொள்ளலாம்.
  அக்காலக் கட்டத்தில் தமிழ்மொழியின் பல்வேறு இலக்கணக் கூறுகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.
  மராட்டியர் காலத் தமிழ்மொழியில் பேச்சு வழக்குச் சொற்களின் தாக்கத்தையும் மற்றும் பிறமொழிச் சொற்களின் வருகையையும் உணர்ந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 18-10-2019 12:51:11(இந்திய நேரம்)