Primary tabs
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளை அறிந்து கொள்வீர்கள்.
•பல்லவர் கால நிலையையும், அக்காலக் கட்டத்தில் எழுந்த இலக்கிய இலக்கண நூல்கள் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.•பல்லவர் காலத் தமிழ்மொழியின் பல்வேறு இலக்கணக் கூறுகளையும், முந்தைய காலத் தமிழ்மொழி வழக்கிலிருந்து பெயரியல் மாறும் விதங்களையும் சில சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.•இலக்கணக் கூறுகளில் ஒன்றான வினைச்சொற்களின் பல்வேறு வகைகள் பல்லவர் காலத் தமிழில் வழங்கும் முறைகளைப் பற்றிய சொல்லியல் குறித்த செய்திகளை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.•மொழி காலத்திற்கு ஏற்ப மாறிவரும் தன்மை உடையது என்பதால், சொற்கள் எங்ஙனம் பொருள் மாற்றம் அடைகின்றன என்ற சொல்லாட்சி பற்றிய கருத்துகளையும் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.