தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    இடைக்காலத்தில் பக்தி இயக்கத்தால் தமிழ்மொழி புதுப்பொலிவை அடைந்தது என்பதை அறிந்தோம். தமிழ்மொழி, மக்கள் மொழியாக மாறியது. பல்லவர் காலத்தில் அரசியல், சமூகம், பண்பாடு, இலக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இவை தமிழ் மொழியிலும் பல மாற்றங்கள் ஏற்படக் காரணமாய் அமைந்துவிட்டன. பல்லவர் காலத் தமிழ்மொழி எழுத்தளவில் மட்டுமன்றி இலக்கண அளவிலும் பல மாற்றங்களுக்கு உள்ளானது. வடமொழிச் சொற்கள் பல புகுந்தன. இதன் விளைவாகத் தமிழ் மொழி நெகிழ்வுற்றது. சொல்வளம் செறிவடைந்தது. எளிமையும் நளினமும் தமிழ் மொழியை இனிமையாக்கின. இப்பக்தி இயக்கத்தின் பயனாகத் தோன்றிய இலக்கியங்கள் கொண்டு பல்லவர் காலத் தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை விளக்குவதாக இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 18:48:17(இந்திய நேரம்)