தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0513-பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    தமிழ் மொழி வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றோடும் தமிழகத்தின் அரசியல் நிலையோடும் மிகுந்த தொடர்புடையது. இடைக்காலத்தின் இறுதியில் நம் தமிழகத்தில் ஏற்பட்ட மராட்டியரின் ஆட்சியும் தமிழ்மொழி, மாற்றங்கள் பல அடைவதற்கு காரணமாகியது. தஞ்சைப் பகுதியை ஆண்ட மராட்டிய மன்னர்களின் ஆதரவாலும் தமிழ் மொழி ஓரளவு வளர்ந்து வந்துள்ளது. பல்லவர், சோழர் காலங்களைப் போன்று சிறந்த பெரும் இலக்கியங்கள் படைக்கப்படாவிட்டாலும், கவிஞர்கள் சிலர் தோன்றிப் புதிய இலக்கியச் செல்வங்கள் சிலவற்றையேனும் அளித்துள்ளார்கள். மராட்டியர் காலத்தில் தமிழ்மொழியில் ஏற்பட்ட மொழிக் கூறுகளின் மாற்றங்களை விளக்குவதாக இந்தப் பாடப் பகுதி அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 12:29:01(இந்திய நேரம்)