தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒலி மாற்றங்கள்

 • 6.2 ஒலி மாற்றங்கள்

  மராட்டியர் காலத்தில் தமிழகத்து அரசியலில் பிற மொழியாளர் செல்வாக்கு மிகுந்தது. முதலில் இசுலாமியர் படையெடுப்பும் பின்னர் தெலுங்கு மொழி பேசும் நாயக்கர் ஆட்சியும், பின்னர் ஏற்பட்ட மராத்தியர் ஆட்சியும் தமிழ்மொழி ஒலியிலும் மொழி அமைப்பிலும் பல மாற்றங்களை உருவாக்கின.

  இலக்கண ஆசிரியர்கள் வடமொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று கூறி வந்த போதும், கல்வெட்டுகளில் முதலிலிருந்தே வடமொழி எழுத்துகள் - கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப் பட்டன. இலக்கியத்தில் முதன் முதலில் 15ஆம் நூற்றாண்டிலிருந்தே அதாவது அருணகிரியாரின் திருப்புகழிலிருந்தே ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, முதலிய எழுத்துகள் எழுத்துத் தமிழில் கலந்தன. தமிழ் மரபுக்கு மாறாக, ரகரமும் (ரீங்காரம், ருது போன்ற சொற்கள்) லகரமும் (லோகம், லீலை போன்ற சொற்கள்) சொல்லுக்கு முதலில் வரத் தொடங்கின.

  6.2.1 உயிர், மெய் ஒலிகள்

  நாயக்கர் காலத் தமிழில் வழங்கப்பட்ட உயிர், மெய் எழுத்துகளே மராட்டியர் காலத் தமிழிலும் வந்து வழங்கின.

  உயிர் எழுத்துகள்
  இ ஈ உ ஊ
  எ ஏ ஒ ஓ
  அ ஆ
  மெய் எழுத்துகள்
  க் ச் ட் ற் த் ப் ங் ஞ் ண் ன் ம் ய் ந் ழ் ர் ல் வ் ள்

  6.2.2 உயிரொலி மாற்றங்கள்

  சோழர், நாயக்கர் கால ஒலி மாற்றங்கள் பல மராட்டியர் காலத்தில் நிலை பெற்றுவிட்டன என்று கூறலாம். மராட்டியர் கால ஒலி மாற்றங்களை இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் போன்ற ஆதாரங்களின் துணை கொண்டு அறிய முடியும்.

  • அகர மாற்றம்

  அகரம்; இகரமாக, எகரமாக, ஐகாரமாகப் பல இடங்களில் வந்து வழங்கப்படுகின்றது.

  அ) அகர இகர மாற்றம் (அ > இ)

  சான்று:

  கஜம்
  >
  கிஜம்
  பரிபாலனம்
  >
  பரிபாலினம்

  ஆ) அகர எகர மாற்றம் (அ > எ)

  இம்மாற்றம் சோழர் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்தாலும் மராட்டியர் காலத்தில் மிகுந்து காணப்படுகிறது.

  சான்று:

  கங்கை
  >
  கெங்கை
  கருடன்
  >
  கெருடன்
  தசமி
  >
  தெசமி
  லட்சுமணன்
  >
  லெட்சுமணன்
  ரகுநாதன்
  >
  ரெகுநாதன்
  யஸ்வத்தம்பா
  >
  யெஸ்வத்தம்பா

  இ) அகர ஐகார மாற்றம்

  உயிர்க்குறில் அகரமானது உயிர்நெடில் ஐகாரமாகவும் மாறுபட்டுள்ளது.

  சான்று:

  மற்றுமுள்ள > மைத்துமுள்ள

  • இகர மாற்றம்

  கர ஒலியானது அகரமாகவும், எகரமாகவும், யிகரமாகவும், யெகரமாகவும் பலவிடங்களில் பயின்று வந்துள்ளது.

  அ) இகர அகர மாற்றம் (இ > அ)

  மராட்டியர் காலத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இம்மாற்றம் காணப்படுகின்றது.

  சான்று:

  மதிள் > மதள்

  ஆ) இகர எகர மாற்றம் (இ > எ)

  சான்று:

  நிலம்
  >
  நெலம்
  விலை
  >
  வெலை

  இ) இகர யிகர மாற்றம் (இ > யி)

  அரை உயிரான கரத்தின் சாயல் பெற்ற கரம் யிகரமாக ஒலிக்கப்படும் இடங்களும் உண்டு.

  சான்று:

  இதின்மேல்
  >
  யிதின் மேல்
  இதுக்கு
  >
  யிதுக்கு
  இந்த
  >
  யிந்த
  இவர்கள்
  >
  யிவர்கள்
  இலாகா
  >
  யிலாகா
  இறை
  >
  யிறை
  இந்தியக் கரை
  >
  யிந்தியக் கரை

  ஈ) இகர யெகர மாற்றம் (இ > யெ)

  கரம் கரமாக மாறுவதுடன் கரச் செல்வாக்குப் பெற்று யெகரமாகவும் மாற்றமடைகின்றது.

  சான்று:

  இலை
  >
  எலை
  >
  யெலை
  பிணை
  >
  பெணை

  • ஈகார மாற்றம்

  உயிர்க்குறில் இகரத்தைப் போலவே உயிர்நெடில் ஈகாரமும் மேற்கூறிய மாற்றங்களை அடைகின்றது.

  அ) ஈகார யீகார மாற்றம் (ஈ > யீ)

  சான்று:

  ஈசன்
  >
  யீசன்
  ஈழம்
  >
  யீழம்

  • எகர மாற்றம் (எ > யெ)

  கர ஒலியானது யகர ஒலிச் சாயலைப் பெற்று யெகரமாக ஒலிக்கும் இடங்களைக் காணலாம்.

  சான்று:

  எருது
  >
  யெருது
  எப்பேர்ப்பட்ட
  >
  யெப்பேர்ப்பட்ட
  எங்களுர்
  >
  யெங்களூர்
  எல்லை
  >
  யெல்லை
  எழுதி
  >
  யெழுதி

  • ஏகார மாற்றம் (ஏ > யே)

  கரத்தைப் போன்று காரமும் கர ஒலியின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

  சான்று:

  ஏழு
  >
  யேழு
  ஏகோசி
  >
  யேகோசி

  • ஐகார மாற்றம் (ஐ அய்)

  உயிர் நெடில் காரமானது ‘அய்’ என ஒலிக்கப்படும் இடங்கள் பல உள்ளன.

  சான்று:

  கை எழுத்து
  >
  கய் எழுத்து
  ஐ நெஸ
  >
  அய் நெஸ்
  ஐவேஜி
  >
  அய்வேஜி
  ஐயங்கார்
  >
  அய்யங்கார்
  கையிலே
  >
  கய்யிலே
  வைக்கிறது
  >
  வய்க்கிறது
  தையலம்மை
  >
  தய்யலம்மை

  • உகர மாற்றம்

  உயிரொலி உகரமானது சில இடங்களில் கரமாகவும் சில இடங்களில் கரமாகவும் ஒலிக்கப்படுகின்றது.

  அ) உகர இகர மாற்றம் (உ > இ)

  சான்று:

  புஞ்சை
  >
  பிஞ்சை
  புறம்
  >
  பிறம்

  ஆ) உகர எகர மாற்றம் (உ > எ)

  சான்று:

  சுவர் > செவர்

  இவ்வாறு உயிரொலிகள் பல இடங்களில் மாற்றமடைந்து மராட்டியர் காலத் தமிழ்மொழி வளர்ச்சியைப் பறைசாற்றி நிற்கின்றன.

  6.2.3 மெய்யொலி மாற்றங்கள்

  மெய்யொலியானது மராட்டியர் காலத்தில் மிகுந்த மாற்றங்களுக்கு உள்ளாகியது. தமிழகத்தைத் தமிழர் ஆளாத சூழலிலும், பிறமொழிகளின் செல்வாக்கினாலும் மெய்யொலிகள் பல மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய சூழலில் வேறுபாடுகள் பல அடைந்துள்ளன.

  • சகர மாற்றம் (ச > த)

  வல்லிடை ஒலியான கரம் பல்லொலியாக மாறுகிறது.

  சான்று:

  சண்டேசுவரர்
  >
  தண்டேசுவரர்
  சாசனம்
  >
  சானம்

  • றகர மாற்றம்

  மராட்டியர் கால றகர ஒலியானது கரமாகவும், கரமாகவும் கரமாகவும் காணக்கிடக்கின்றது.

  அ) றகர தகர மாற்றம் (ற > த)

  தற்காலத் தமிழில் காணப்படும் றகர தகர மாற்றம் சோழர் காலத்திலேயே காணப்பட்டாலும் மராட்டியர் காலத்தில் மிகுந்துள்ளது. றகரம் இரட்டிக்கும் போது மட்டுமே தகரமும் இரட்டித்து இத்தகைய மாற்றம் ஏற்படுகின்றது எனலாம்.

  சான்று:

  மற்றும்
  >
  மத்தும்
  இற்றை
  >
  இத்தை
  பெற்ற
  >
  பெத்த
  ஆற்றுக்கு
  >
  ஆத்துக்கு
  முற்றிலும்
  >
  முத்திலும்
  கற்ற
  >
  கத்த
  கிணற்றில்
  >
  கிணத்தில்
  வற்றாத
  >
  வத்தாத
  நேற்று
  >
  நேத்து
  பிதற்றி
  >
  பிதத்தி
  கற்றவர்
  >
  கத்தவர்

  ஆ) றகர டகர மாற்றம் (ற > ட)

  மேலும் றகரம் டகரமாக ஒலிக்கும் இடங்களும் உண்டு.

  சான்று:

  வென்றோன்
  >
  வெண்டோன்
  இருக்கின்ற
  >
  இருக்கிண்ட
  உற்சாகம்
  >
  உட்சாகம்

  இ) றகரமானது மேலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளது.

  >
  க, ன, ண, ச
  தெற்கு
  >
  தெக்க
  (ற > க)
  மணிக்குன்றம்
  >
  மனிக்குன்னம்
  (ற > ன)
  கொன்ற
  >
  கொண்ண
  (ற > ண)
  நாற்சாரி
  >
  நாச்சாரி
  (ற > ச)

  ஈ) றகர ரகர மாற்றம் (ற > ர)

  றகர ரகர ஒருங்கிணைவு பல்லவர் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்த போதும் மராட்டியர் காலத் தமிழில் மிகுந்துள்ளதைக் காண முடிகிறது.

  சான்று:

  ஆறு
  >
  ஆரு பொறுக்க
  >
  பொருக்க
  அறியாத
  >
  அரியாத மறக்க
  >
  மரக்க
  பதற
  >
  பதர உறவாடி
  >
  உரவாடி
  நூறு
  >
  நூரு
  >
   

  • தகர சகர மாற்றம் (த்த > ச்ச)

  றகரம் தகரமானதைப் போலவே தகரமும் சகரமாகிற இடங்கள் பல உள்ளன. தகரம் இரட்டித்து வரும்போது சகரமும் இரட்டித்து இத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது எனலாம்.

  சான்று:

  அவித்த
  >
  அவிச்ச
  நடப்பித்த
  >
  நடப்பிச்ச
  பிறப்பித்தோம்
  >
  பிறப்பிச்சோம்

  • பகர வகர மாற்றம் (ப > வ)

  இம்மாற்றம் தமிழ்மொழியில் மராட்டியர் காலத்தில் எங்கோ ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது.

  சான்று:

  பாவாசி > வாவாசி

  • ரகர றகர மாற்றம் (ர > ற)

  அக்காலக் கட்டத்தில் கரமானது கரமாகப் பலவிடங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. றகர ரகர ஒருங்கிணைவே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

  சான்று:

  தெரிய
  >
  தெறிய
  மாரன்
  >
  மாறன்
  நெருக்கு
  >
  நெறுக்கு
  ராத்திரி
  >
  றாத்திரி
  ராணி
  >
  றாணி
  ராஜா
  >
  றாஜா
  அரண்மனை
  >
  அறண்மனை
  பெரிய
  >
  பெறிய
  வரிசை
  >
  வறிசை
  நகரம்
  >
  நகறம்
  அவர்கள்
  >
  அவற்கள்
  தர்மம்
  >
  தற்மம்
  பண்ணினார்
  >
  பண்ணினாற்
  செய்தார்
  >
  செய்தாற்

  • நகர னகர மாற்றம்

  நகர னகர ஒருங்கிணைவு காரணத்தால் பலவிடங்களில் நகரம் னகரமாகக் காணப்படுகின்றது.

  சான்று:

  நம்
  >
  னம்
  நாம்
  >
  னாம்
  நாங்கள்
  >
  னாங்கள்
  நாடு
  >
  னாடு
  நாழிகை
  >
  னாழிகை
  நாணயில்
  >
  னாணயில்
  நாலாசாதி
  >
  னாலாசாதி
  நாயக்கர்
  >
  னாயக்கர்
  நாச்சியார்
  >
  னாச்சியார்
  நாட்டாமை
  >
  னாட்டாமை

  • னகர மாற்றம்

  கர ஒலியானது மராட்டியர் காலத்தில் கரமாகவும் கரமாகவும் சில இடங்களில் ஒலிக்கப்பட்டுள்ளது. கரமாக ஒலிக்கப்படும்போது, அடுத்துள்ள கரம் கரமாகிறது.

  அ) னகர டகர மாற்றம் (ன > ண)

  சான்று:

  செல்லா நின்ற
  >
  செல்லா நிண்ட
  வென்றோன்
  >
  வெண்டோன்

  ஆ) னகர ளகர மாற்றம் (ன > ள)

  சான்று:

  புத்திரன்
  >
  புத்திராள்
  பவுத்திரன்
  >
  பவுத்திராள்

  • வகர பகர மாற்றம் (வ > ப)

  மராட்டியர் காலத் தமிழில் சில இடங்களில் வகர ஒலியானது பகரமாகக் காணப்படுகின்றது.

  சான்று:

  அசுவமேதம்
  >
  அசுபமேதம்
  ரேவதி
  >
  ரேபதி

  • ழகர, ளகர, ஷகர மாற்றம்

  இம்மூன்று மாற்றங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாக விளங்குகின்றன.

  அ) ழகர ளகர மாற்றம் (ழ > ள)

  இம்மாற்றங்களும் பல்லவர் சோழர் காலங்களிலேயே காணப்படுகின்றன.

  சான்று:

  கீழத்தெரு
  >
  கீளத்தெரு
  சோழ
  >
  சோள
  பழைய
  >
  பளைய
  பழம் பஞ்சாரம்
  >
  பளம் பஞ்சாரம்

  ஆ) ழகர ஷகர மாற்றம் (ழ > )

  வடமொழிச் செல்வாக்கால் சிலவிடங்களில் தமிழ் ஒலிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

  சான்று:

  சோழ மண்டலம் > சோஷ மண்டலம்

  இ) ளகர ழகர மாற்றம்

  ழகரம் ளகரமாவதைப் போல ளகரமும் ழகரமாக மாறுவது இக்காலக் கட்டத்தில் ஏற்பட்ட ஒலி மாற்றமாக உள்ளது.

  சான்று:

  வளமை > வழமை

  ஈ) ஷகர ழகர மாற்றம்

  தமிழ் வடமொழித் தாக்கம் பெற்றது போல வடமொழி ஷகரமும் தமிழின் சிறப்பு ஒலியான ழகரமாக ஒலிக்கப்படுகின்றது.

  சான்று:

  அபிஷேகம்
  >
  அபிழேகம்
  பாஷை
  >
  பாழை
  பிரதோஷம்
  >
  பிரதோழம்
  தோஷம்
  >
  தோழம்
  புருஷோத்துமன்
  >
  புருழோத்துமன்
  கிஷ்ணதேவராயர்
  >
  கிழ்ணதேவராயர்
  பாஷை
  >
  பாழை
  தோஷம்
  >
  தோழம்
  ரிஷப
  >
  ரிழப

  இவ்வாறாக மெய்யொலிகள் நாம் எதிர்பாராதவாறு பற்பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதற்குச் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் சான்றுகள் பல காணப்படுகின்றன.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1.
  மராட்டியர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கிய மல்லாத பிற ஆதாரங்கள் யாவை?
  2.
  கல்வெட்டுகளில் வடமொழி எழுத்துகள் எந்த வடிவில் எழுதப்பட்டன?
  3.
  மராட்டியர் காலத் தமிழ் மொழியின் இகர யிகர மாற்றத்திற்குச் சான்றுகள் தருக.
  4.
  வகர பகர மாற்றத்திற்கு இரு சான்றுகள் தருக..
புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 12:50:38(இந்திய நேரம்)