Primary tabs
3.2 உயிரெழுத்து மாற்றங்கள்
ஒவ்வொரு காலத்திலும் மொழி மாறிவரும் தன்மையுடையது. எழுத்துகளில் உயிர், மெய் இரண்டிலும் பல மாற்றங்கள் சோழர் காலத்திலும் ஏற்பட்டன. உயிர் எழுத்துகள் பல்லவர் காலத்தில் வழங்கியவாறே எழுதப்பட்டுள்ளன. நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்கள் உயிரெழுத்துக்குரிய இலக்கணத்தைப் பேசுகின்றன.
பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் பல்லவர் கால உயிர்கள் தொடர்ந்து இருந்தன.
அ-அதுஆ-ஆடுஇ-விடுஈ-வீடுஉ-குடைஊ-கூடைஎ-எரிஏ-ஏரிஒ-ஒடுஓ-ஓடு• மாற்றங்கள்
மொழி முதலில் எல்லா உயிர்களும் சொல்லில் இடம் பெறுவதாகத் தொல்காப்பியம் கூறுவது போலவே நன்னூலும் வீரசோழியமும் கூறுகின்றன.
மொழி இறுதியிலும் எல்லா உயிரும் வருவதாகத் தொல்காப்பியம் கூறுவதுபோல நன்னூலும் கூறுகிறது. ஆனால், வீரசோழியமோ எகர ஒகரங்களைத் தவிரப் பிற உயிர்கள் அனைத்தும் மொழியிறுதியில் வருவதாகக் கூறுகின்றது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு சோழர் காலத்தில் உயிரெழுத்து அடையும் மாற்றங்களைக் காணலாம்.
• அகர மாற்றம்
அ) அகர இகர மாற்றம் (அ > இ)
மெய்யெழுத்தோடு கூடிய அகரம் இகரமாக மாறுவது பல இடங்களில் காணப்படுகிறது.
சான்று:
அதனுக்கு>அதினுக்குசுலபம்>சுலிபம்மேலன>மேலினஆ) அகர உகர மாற்றம் (அ > உ)
சான்று:
கொண்டது>கொண்டுதுபுகுந்தது>புகுந்துது• இகர மாற்றம்
முன்னுயிரான இகரம் அகரமாகவும் சில இடங்களில் எகரமாகவும் ஒலிக்கப்படுகின்றது:
அ) இகர அகர மாற்றம் (இ > அ)
பின்னால்வரும் அகர ஒலிக்கு ஏற்ப இகர ஒலியும் அகரமாக மாறும் இடங்கள் பலவுண்டு.
சான்று:
அதியமான்>அதயமான்ஞாயிறு>ஞாயறுவயிறு>வயறுஆ) இகர எகர மாற்றம் (இ > எ)
அகரக் கீழுயிருக்கு ஏற்ப மேலுயிரான இகரம் எகர நடுவுயிராக உச்சரிக்கப்படுகிறது.
தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிச் சொற்களில்தான் இம்மாற்றம் பெரும்பாலும் காணப்படுகிறது. எனினும் சிறுபான்மைத் தமிழ்ச் சொற்களிலும் காணப்படுகிறது.
சான்று:
பிறவும்>பெறவும்நிலம்>நெலம்• உகர மாற்றம்
பின்னுயிரான உகரம் சில இடங்களில் இகரமாகவும் பல இடங்களில் ஒகரமாகவும் ஒலிக்கப்படுகின்றது.
அ) உகர இகர மாற்றம் (உ > இ)
சான்று:
அமுது>அமிதுஅருளின>அரிளினசெலுத்தி>செலித்திஅமுதசாகரர்>அமிதசாகரர்ஆ) உகர ஒகர மாற்றம் (உ > ஒ)
கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழ்ச் சொற்களிலுள்ள உகரம் ஒகரமாகக் காணப்படுகின்றது.
சான்று:
குலைதர>கொலைதரகுந்தள அரசர்>கொந்தள அரசர்குலோத்துங்க>கொலோத்துங்கஉபாதி>ஒபாதி• எகர மாற்றம் (எ > இ)
இகரம் எவ்வாறு எகரமாக ஒலிக்கப்படுகின்றதோ, அது போலவே எகரமும் இகரமாக ஒலிக்கப்படுகின்ற சொற்கள் தமிழில் பல காணப்படுகின்றன.
சான்று:
பெயரால்>பியரால்செலவு>சிலவுஎனக்கு>இனக்குஎடுத்து>இடுத்து• அகர ஐகார மாற்றம்
அகரம் ஐகாரமாதலும் காணப்படுகின்றது. இம்மாற்றம் சங்க காலத் தமிழில் சகர யகர மெய்களுக்கு முன்னர்க் காணப்படுகின்றது.
சான்று:
அரசர்>அரைசர்அரசு>அரைசுமுரசு>முரைசுஇந்த அகர ஐகார மாற்றம் சோழர் காலத்து இலக்கிய மொழிகளிலும் காணப்படுகின்றது.
சான்று:
சமயம்>சமையம்தச்சன்>தைச்சன்அகரத்திற்கு முன்னரோ பின்னரோ இடையண்ண ஒலி தொடர்ந்து வராத போதும் அகரம் ஐகாரமாக மாறுகிறது.
சான்று:
அத்தை>ஐத்தைஅத்தான்>ஐத்தான்இம்மாற்றத்தை இக்காலக் கிளை மொழியிலும் காணமுடியும்.
• இகர ஐகார யகரத்தின் தாக்கம்
இம்மூன்று ஒலிகளை அடுத்து வரும் மூக்கொலியும் (ந), அதன் இனமாகிய பல்லொலியும் (த) இடையண்ணத்தின் சாயல் பெற்று வருகின்றன.
சான்று:
எரிந்து>எரிஞ்சுஐந்து>அஞ்சுவிளைந்த>விளைஞ்சகாய்ந்த>காய்ஞ்ச• உகர இகர மாற்றம்
சொல்லிறுதி உகரம் இடையண்ணத் தடையொலியாகிய சகரத்தை அடுத்து வருவதால் இகரமாக மாறும்.
சான்று: கழஞ்சு > கழஞ்சி
• இடையண்ண உயிர் ஐகாரத்தின் தாக்கம்
இடையண்ண ஒலியாகிய ஐகாரத்தை அடுத்து மூக்கொலிகள் வரும்போது அவை இடையண்ண மூக்கொலிகளாகின்றன.
சான்று:
ஐந்நூறு > ஐஞ்ஞூறு
• இடையண்ண மெய்யொலியினால் ஐகாரம் தாக்கமடைதல்
இடையண்ண மெய்யாகிய சகரத்தின் தாக்கத்தால் ஐகாரம் எகரமாகிறது.
சான்று:
அரசர்>அரைசர்>அரெசர்தலை>தலெசினை>சினெஎல்லை>எல்லெ3.2.3 மொழி முதல் இகரத்துடன் யகர மெய் வருதல்
பல்லவர் காலத்தில் முன் உயிர்கள் யகர உடம்படுமெய்யுடன் உயிர்த் தொடர்களாயின. 11, 12,13ஆம் நூற்றாண்டுகளில் இகர உயிர்கள் யகர உடம்படுமெய்யை மொழி முதலில் பெற்று வந்தன.
சான்று:
3.2.4 இதழ்ச் சாயல் பெறுதல்
அ) அகர உகர மாற்றம்
அகரத்தைத் தொடர்ந்தோ அல்லது அதற்கு முந்தியோ இதழுயிர் வருமாயின் அகரம் இதழ்ச்சாயல் பெற்று ஒகரமாகிறது.
சான்று:
வானகப்படி>வானகொப்படிஅனுபவித்து>அனுபொவித்துபுறவரி>புறொவரிசெப்பருந்திறத்து>செப்பொருந்திறத்துஆ) இகர உகர மாற்றம்
இகரம் தனக்கு முன்னரோ பின்னரோ இதழ் ஒலிகளையோ நாவளை ஒலிகளையோ பெற்று வருமாயின் உகரமாக உச்சரிக்கப்படுகிறது.
சான்று:
களிறு>களுறுதமிழ்>தமுழ்தம்பிரான்>தம்புரான்முசிறி>முசுறிமதில்>மதுல்இ) எகர ஒகர மாற்றம்
எகரத்திற்கு முன்போ பின்போ இதழ் ஒலியோ, நாவளை ஒலியோ அல்லது நுனியண்ண ஒலியோ வந்தால் எகரம் ஒகரமாக மாற்றமடைகிறது.
சான்று:
தென்றிசை>தொன்றிசைசெம்பாதி>சொம்பாதிநெளிற்று>நொளிற்றுசெவிடு>சொவிடுசெந்தாமரை>சொந்தாமரைஎப்பேர்ப்பட்ட>எப்போர்ப்பட்ட‘சொவிடு’ என்ற வடிவம் பின்னர் ‘சோடு’ என்றாகியது. ஒப்புமையாக்கத்தால் செந்தாமரை என்பது சொந்தாமரையானது.
3.2.5 தமிழாக்கத்தில் அகர எகர மாற்றம்
ஒலிப்பு ஒலியுடன் தொடங்கும் வடமொழிச் சொற்களைப் பொறுத்த வரை சொற்களில் உள்ள அகரம் எகரமாக ஒலிக்கப்படுகின்றது.
சான்று:
கங்கா>கங்கை>கெங்கைதண்டா>தண்டம்>தெண்டம்பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வடமொழிச் சொற்களில் மட்டுமல்லாது பிற சொற்களிலும் இம்மாற்றம் ஏற்படலாயிற்று.
சான்று:
கல்>கெல்களிறு>கெளிறுஇவ்வாறு உயிரெழுத்துகள் பல மாற்றங்களை அடைய வேண்டிய சூழலுக்கு உள்ளாகின. பேச்சுத் தமிழின் அடிப்படையான பல மாற்றங்களுக்கு வழி வகுத்தன என்று கூறலாம்.