தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்துச் சீர்திருத்தம்

  • 1.6 எழுத்துச் சீர்திருத்தம்

    உலக அளவில் எழுத்துகளின் வடிவங்கள் இருவகைகளில் மாற்றம் பெற்று வருகின்றன. இயல்பாக எழுத்து வடிவங்கள் மாற்றம் பெறுவது ஒரு நிலை. திட்டமிட்டு எழுத்து வடிவங்களை மாற்றுவது மற்றொரு நிலை.

    இயல்பாக நிகழும் எழுத்து வடிவ மாற்றங்களுக்குத் தனிமனிதர்கள் காரணமாக அமைவது இல்லை. எழுது பொருள்களின் தன்மையே முதன்மைக் காரணமாக அமைகின்றது. தொடக்கக் காலத்தில் என்று எழுதப் பெற்ற என்னும் எழுத்து காலப் போக்கில் இன்றைய நிலையை அடைந்தது. இதற்கு ஓலைச் சுவடியில் எழுதும் பொழுது கையை எடுக்காமல் எழுத்துகளை எழுதி வந்ததே காரணம் என்று குறிப்பிடுகின்றனர். இத்தகு மாற்றம் மெல்ல மெல்ல நிகழ்ந்ததால் அம்மாற்றம் நிகழ்ந்த காலத்தைத் துல்லியமாக நம்மால் வரையறுக்க முடியவில்லை.

    தமிழி எழுத்துகளிலிருந்து தமிழ் எழுத்துகளாகவும் வட்டெழுத்துகளாகவும் மாற்றம் பெற்ற காலத்தை இன்று வரை நம்மால் வரையறுக்க முடியவில்லை. மேலும் ஒரே கல்வெட்டில் தமிழ் எழுத்துகளும் வட்டெழுத்துகளும் பயன்படுத்தப் பெற்றதையும் காண முடிகின்றது. இவற்றிற்கெல்லாம் அடிப்படை எழுத்து மாற்றங்கள், பண்டைக் காலத்தில் இயல்பாக நிகழ்ந்து வந்ததாகத்தான் இருக்க வேண்டும்.

    எழுத்துகளின் வடிவ நிலையைத் திட்டமிட்டு மாற்ற முற்படுகையில், அதற்குத் தூண்டுகோலாக இருந்தவரை அறிய இயலும். வடிவ மாற்றம் நிகழ்வுற்ற காலத்தையும் அறிய இயலும். வடிவ மாற்றம் மேற்கொள்ளப் பெற்றதற்குரிய காரணத்தையும் அறிந்து கொள்ள முடியும். இத்தகு நிலையையே நாம் எழுத்துச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகின்றோம்.

    1.6.1 தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

    தமிழ் எழுத்துகளின் வடிவ நிலையை மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருபதாம் நூற்றாண்டில் உணரப் பெற்றது. பல்வேறு அறிஞர்கள் இது தொடர்பான கருத்துகளை முன்வைத்துள்ளனர். இவற்றில் நடைமுறைப்படுத்தப் பெற்றவற்றை இங்குப் பார்ப்போம்.

    தமிழ் உயிர்மெய் எழுத்துகளில் கா முதல் னா வரை உள்ள எழுத்துகளிலும், கொ முதல் னொ வரை உள்ள எழுத்துகளிலும், கோ முதல் னோ வரை உள்ள எழுத்துகளிலும் ணகர, றகர, னகர எழுத்துகள் மட்டும், ஏனைய எழுத்துகள் போன்று எழுதப் பெறாமல் எழுதப் பெற்று வந்தன. அதாவது என்றே எழுதப் பெற்று வந்தன.

    கை முதல் னை வரையிலான 18 எழுத்துகளில் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் மட்டும் என்று எழுதப் பெற்று வந்தன. ஏனைய எழுத்துகள் எல்லாம் எனும் துணை எழுத்து இட்டு (கை, சை, தை...) எழுதப் பெற்று வந்தன.

    மேற்சொல்லப் பெற்ற இரு நிலைகளிலும் ஓர் ஒத்த ஒழுங்கு முறை இல்லாமல் இருந்தது. மேலும் அச்சு வார்ப்புகளிலும், தட்டச்சு எந்திரங்களிலும் ஆகிய எழுத்துகளுக்குத் தனி அச்சு வார்க்க வேண்டி இருந்தது. எனவே இந்த எழுத்துகளை எல்லாம் இந்த எழுத்துகளை ஒத்த ஏனைய எழுத்துகளைப் போன்றே எழுத வேண்டும் என்னும் கருத்து தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்களால் முன் வைக்கப் பெற்றது. அவர் தம் பத்திரிகையை அப்புதிய வடிவ எழுத்துகளைப் பயன்படுத்தி அச்சிட்டார். அவரது கருத்து காலப் போக்கில் வலுப்பெற்றது. பின்னர்த் தமிழக அரசின் ஆணையால் மாற்றி அமைக்கப் பெற்ற புதிய எழுத்து வடிவங்கள் உலகம் முழுவதும் வழக்குப் பெற்றுள்ளன. அவ்வாறு மாற்றி அமைக்கப் பெற்றவை தொடர்பான விவரம் பின்வருமாறு:

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 18:51:08(இந்திய நேரம்)