Primary tabs
-
.
பாடம் – 3
A06123 சமூகக் கதைப்பாடல்கள்
இந்தப் பாடம் சமூகக் கதைப்பாடல் என்றால் என்ன என்பதை வரையறை செய்கின்றது. இவ் வரையறைக்குள் இடம் பெறும் கதைப்பாடல்களின் பாடுபொருள் இவை இவை என வகைப்படுத்தி, அவ் வகைப்பாட்டில் இடம்பெறும் கதைகள் இவை இவை என்பதனைச் சுட்டுவதோடு கதைச் சுருக்கத்தையும் எடுத்துரைக்கின்றது.
சமூகக் கதைப்பாடல்கள் தோன்றிய காலச் சூழல் மற்றும் கதைத் தலைவன் தலைவியர் பற்றிய குறிப்பு, கதை இறுதியில் அவர்கள் அடைந்த நிலை ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறது. எடுத்துரைத்த கதைப்பாடல்களில் முத்துப்பட்டன் கதைப்பாடல் சிறப்பு உடையது எனக் குறிப்பிடுகிறது. அக்கதையையும் அக்கதை மாந்தர்கள் தெய்வமானதையும் எடுத்துரைக்கின்றது.
மேலும் கதைப்பாடல்கள் வாயிலாக அறியவரும் தமிழ்ச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றுள் சிலவற்றைச் சுட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தை நீங்கள் படிப்பதன் மூலம் கீழ்வரும் செய்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- (1)
அந்நியர் ஆட்சியின் போது உள்ள தமிழகச் சூழல். (2)
தமிழகத்திற்குள்ளே பாளையக்காரர், நில
உரிமையாளர்கள் நடத்திய அரசியல். (3) மேல்தட்டுமக்கள்,
கீழ்த்தட்டு மக்கள் மீது செலுத்திய அடக்குமுறை.
- சமூகக்
கதைப்பாடல்கள் வாயிலாகச் சாதிக் கட்டுப்பாடு, உயர்ந்தோர்,
தாழ்ந்தோர் என்ற மனப்பான்மை எந்த அளவிற்குச் சமுதாயத்தைப்
பாதித்துள்ளது என்று அறியலாம்.
- தமிழகக்
கிராமப்புறங்களில் வழங்கும்
சொல்லாட்சிகள், பெயர்கள், ஊர்கள் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
- தமிழ்
வட்டார வழக்குச் சொல்லகராதியின் துணைகொண்டு பேச்சு
வழக்கில் அமைந்துள்ள சொற்களின் பொருளை அறியலாம்.
- கதையை நடத்திச் செல்ல எவையெல்லாம் உத்திகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிவதன் மூலம் பிற கதைப்பாடல்களிலும் இக்கூறு இடம் பெற்றுள்ளதா என்று சோதித்தறியலாம். இவற்றைப் பட்டியலிட்டால் நாட்டுப்புறக் கதைப்பாடல்களின் கதைப் பின்னல் முறையில் ஒரு பொதுமைப்பண்பு இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
- (1)
அந்நியர் ஆட்சியின் போது உள்ள தமிழகச் சூழல். (2)
தமிழகத்திற்குள்ளே பாளையக்காரர், நில
உரிமையாளர்கள் நடத்திய அரசியல். (3) மேல்தட்டுமக்கள்,
கீழ்த்தட்டு மக்கள் மீது செலுத்திய அடக்குமுறை.