தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புராணக் கதைப் பாடல்கள்

  • .

    பாடம் – 4

    A06124 புராணக் கதைப்பாடல்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

    இந்தப் பாடம் புராணக் கதைப்பாடல்கள் எவை என்பதை அறிமுகப்படுத்துகிறது. புராணக் கதைக்கும், புராணக் கதைப் பாடலுக்கும் உள்ள வேறுபாடு என்ன; அதன் வரையறை என்ன; அதன் பாடுபொருள் என்ன என்பதை எடுத்துரைக்கின்றது.

    புராணக் கதைப்பாடல்களில் கதைத் தலைவன் தலைவியர் படைப்பு எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது, வாழ்வியல் முறைகள் எவை எவை இடம் பெற்றுள்ளன என்பதையும் விளக்குகிறது.

    புராணக் கதைப்பாடல் வழியாகச் சமுதாயம் அறிந்து கொள்ளும் கருத்துகள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • கதைப்பாடல்களுக்கு வழங்கும் பல்வேறு பெயர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்
    • பாரதக் கதைகளின் பாத்திரப் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம்.
    • பாடுகளத்தை அடிப்படையாகக் கொண்டு கதை எவை, கதைப்பாடல் எவை என்பதனைக் கண்டறியலாம்.
    • புராணக் கதைப்பாடல்களின் அமைப்பு, பிற பாடல்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளதா எனக் காணலாம்.
    • புராணக் கதைப்பாடல்கள், இக்காலக் கவிஞர்களால் பாடப்படும் போது என்னென்ன வகையில் மாற்றம் பெறுகின்றன என அறியலாம்.
    • கதைப் பாத்திரம் அடையும் இன்னல்களை அறிவதன் மூலம் வாழ்க்கையில் பின்பற்றத் தக்கவை எவை, தகாதவை எவை எனப் பகுத்துணரலாம்.
    • புராணக் கதைப்பாடல், அப்பாடல் தோன்றிய காலச் சூழலை எந்த அளவிற்கு எதிரொலிக்கின்றது என்பதனைக் கண்டறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:26:33(இந்திய நேரம்)