Primary tabs
-
.
பாடம் – 6
A06126 கதைப் பாடல்களில் சமூகம், பண்பாடு, நாட்டுப்புற மரபுகள்
இந்தப் பாடம் ‘சமூகம்’ என்றால் என்ன என்று விளக்குகின்றது. அந்தச் சமூகம் சாதி மற்றும் சமயங்களால் கட்டுண்டு வெவ்வேறாகப் பிரிந்து கிடப்பதை, கதைப்பாடல் கொண்டு விளக்குகின்றது. மேலும் அந்தச் சமூகத்தின் பண்பாட்டை அறிய உதவும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் கதைப்பாடலில் இடம் பெற்றுள்ள தன்மையினை எடுத்துரைக்கின்றது.
நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் பின்பற்றும் மரபுகள் எவை? அவை பின்பற்றப்படுவதற்குரிய காரணம் என்ன என்பதையும் விளக்கமாகச் சொல்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
இப்பாடத்தைக் கற்பதன் மூலம் தமிழ்ச்சமூகம் எத்தனை வகையான சாதிப்பாகுபாட்டினைக் கொண்டுள்ளது என்பதனை அறியலாம்.
-
சாதியால் சிதறுண்டு பிரிந்து கிடக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தில் சமயம் பெற்றுள்ள பங்கினைத் தெரிந்து கொள்ளலாம்.
-
தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டை அறிய உதவும் பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
-
தமிழ்ச் சமுதாயம் கொண்டுள்ள நம்பிக்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
-
தமிழ்ச் சமுதாயத்தை அறிந்து கொள்ள உதவும் நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் பின்பற்றும் மரபுகள் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
-
மரபுகள் கதைப்பாடல்களை எவ்வாறு வழி நடத்திச் செல்கின்றன என்பதையும் அறியலாம்.
-