தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0- பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    கதைப்பாடல் வகைப்பாட்டில் மூன்றாவதாக இங்கே விளக்கப்பட இருப்பது புராணக் கதைப்பாடலாகும். புராணக் கதைப்பாடல், புராணச் சார்புக் கதைப்பாடல், சிறு தெய்வ வழிபாடு வளர்ந்த வளர்ச்சி பற்றிய பாடல் என மேலும் மூவகையாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காலப் போக்கில் இவை மூன்றையும் ‘புராணக் கதைப்பாடல்’ என்ற வகையின் உள்ளேயே அடக்கி அறிஞர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்தப் பாகுபாட்டின் அடிப்படையிலேயே இந்தப் பாடப் பகுதியும் புராணக் கதைப் பாடலை விளக்க முற்படுகின்றது.

    புராண, இதிகாசங்களில் காணப்படும் சிறிய கதைத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்டவையே பெரும்பாலான புராணக் கதைப் பாடல்கள். கதையின் அமைப்பு, கதைப்பின்னல் முறை, கதையின் முடிவு எல்லாம் பெரும்பாலான புராணக்கதைப் பாடல்களில் ஒரே மாதிரியாக அமைந்து உள்ளன. இங்கு அறிமுகப்படுத்தவிருக்கும் புராணக் கதைப் பாடல்களின் துணைக்கொண்டு புராணக் கதைப்பாடல் வரையறை, பாடுபொருள், பாத்திரங்கள், கதைப் பின்னல் முதலியவற்றைக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:26:12(இந்திய நேரம்)