Primary tabs
-
2.0 பாட முன்னுரை
நாட்டுப்புறவியல் மரபுகள் என்னும் தொகுதியில் மூன்றாம் பாடம் ‘வழிபாடு, விழாக்கள்’ என்பதாகும். சடங்குகளும் சடங்கு சார்ந்த நம்பிக்கைகளுமே வழிபாடுகள் மற்றும் விழாக்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணிகள் என்பதால், சடங்குகள், நம்பிக்கைகள் என்ற பாடப் பகுதியின் தொடர்ச்சியாக இப்பாடம் இடம் பெறுகிறது.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்பது மட்டுமல்ல, குடிகள் இல்லாத இடத்திலும் கூடக் கோயில்கள் தோற்றம் பெற்றுள்ளன என்பதுதான் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இது எதனைக் காட்டுகிறது? தெய்வ வழிபாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள தீவிரமான ஈடுபாட்டையும் பலமான நம்பிக்கையையும்தானே காட்டுகிறது? நாட்டுப்புற மக்களிடம் இத்தகைய போக்கு இன்னும் அதிகம் என்றுதான் கூறவேண்டும்.
இப்பாடம் நாட்டுப்புற மக்களால் வழிபடப் படும் சிறுதெய்வங்களைப் பற்றியும் அவை தொடர்பான வழிபாட்டு முறைகள், விழாக்களைப் பற்றியும் விளக்குகிறது.