தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01222.htm-மூதுரையும் நல்வழியும்

 • பாடம் - 3
  C01223  மூதுரையும் நல்வழியும்
  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  மூதுரையும் நல்வழியும் உணர்த்தும் அறக்கருத்துகளை இப்பாடம் தெரிவிக்கிறது. கல்வியின் சிறப்பு, கல்வி அறிவின்மையின் இழிவு, சான்றோர் பெருமை, உதவும் மனப்பான்மையின் உயர்வு, செல்வத்தின் நிலை முதலியவை விளக்கப்படுகின்றன.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • மூதுரை, நல்வழி ஆகிய நூல்களின் அமைப்பை அறிந்து கொள்ள முடியும்.

  • மன்னனை விடவும் கல்வி அறிவு பெற்றவன் மதிக்கப்படுவான் என்பதை உணர முடியும்.
  • சான்றோர் பெருமையை அறிந்து கொள்ளலாம்.
  • உதவி செய்வதால் ஏற்படும் இன்பத்தை அறியலாம்.
  • நல்ல நட்பை அடையாளம் காணலாம்.
  • செல்வத்தின் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
  • உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
  • வரவுக்கேற்ற செலவு செய்வதன் சிறப்பை அறியலாம்.
  • இனிமையான சொற்களைப் பேசுவதால் ஏற்படும் பயனை உணரலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:17:55(இந்திய நேரம்)