தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01222.htm-நீதிநெறி விளக்கம்

  • பாடம் - 5
    C01225  நீதிநெறி விளக்கம்
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    குமர குருபரர் இயற்றிய நீதிநெறி விளக்கம் மனிதனுக்குத் தேவையான அறநெறிகளைத் தெரிவிக்கிறது. கல்வியின் பயனையும், செல்வத்தின் சிறப்பையும், முயற்சியின் பெருமையையும், செயல் ஆற்றும் திறத்தையும், சான்றோர் புகழையும் தெரிவிக்கிறது. மேலும் துறவியர் பின்பற்ற வேண்டியவற்றையும், பின்பற்றக் கூடாதவற்றையும் விளக்கிக் கூறுகிறது.

     
    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • குமரகுருபரர் வாழ்க்கையைப் பற்றியும், அவர் படைத்த நீதிநெறி விளக்கம் என்னும் நூலைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

    • கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் மனித வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

    • முயற்சியால் விதியைக்கூட வெல்ல முடியும் என்பதைச் சான்றுடன் அறிய முடியும்.

    • செயலாற்றும் திறத்தையும், நற்செயல்கள் ஆற்ற வேண்டியதன் தேவையையும், சான்றோர் பெருமையையும் தெரிந்துகொள்ள முடியும்.

    • நல்ல துறவியரின் பெருமையையும், போலித் துறவியரின் இழிவையும், தெய்வம் யார் என்பதையும் அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:19:44(இந்திய நேரம்)