Primary tabs
-
5.7 துறவியர்
துறவுநெறிப்பட்டு வாழ்கிறவர்களும் மனிதர்கள்தாம். அவர்களுக்கும் மனிதனுக்குரிய எல்லா உணர்வுகளும் உண்டு. துறவியர் தங்கள் துறவற நெறிக்கு ஏற்ப, பல உணர்வுகளை விலக்கி வாழ்கிறார்கள். அந்தத் துறவியர் எவற்றை முழுமையாக விலக்க வேண்டும் என்பதைக் குமரகுருபரர் கூறியுள்ளார்.
துறவற நெறியில் தவறாது வாழ்கின்ற துறவியரை நல்ல துறவியர் என்று கூறுகிறோம். அந்த நல்ல துறவியர் மண், பொன், பெண் ஆசைகளை விட்டு விலகி வாழ்வார்கள்.
பெண்மை வியவார்; பெயரும் எடுத்து ஓதார்;
கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் ; பண்ணொடு
பாடல் செவிமடார்; பண்புஅல்ல பாராட்டார்
வீடுஇல் புலப்பகையி னார் (84)(வியவார் = வியந்து போற்றமாட்டார், ஓதார் = சொல்ல மாட்டார், உறைப்ப = பதியும் படியாக, பண் = இசை, செவிமடார் = கேட்கமாட்டார், பாராட்டார் = போற்றமாட்டார்; புலப்பகையினார் = புலன்களை வென்றவர்கள்)
துறவியர் தங்கள் புலன்களின் வழியே மனத்தைச் செலுத்தாமல் துறவற வழியில் புலன்களை அடக்கியாளும் தன்மை உடையவர்கள். எனவே நல்ல துறவியரைப் புலப்பகையினார் என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார். இத்தகைய நல்ல துறவியர், பெண்மைத் தன்மையை வியந்து போற்றமாட்டார்கள்; பெண்களின் பெயரைக்கூடச் சொல்ல மாட்டார்கள்; பெண்களின் உருவம் மனத்தில் பதியும்படியாகப் பார்க்க மாட்டார்கள்; மனத்தில் கிளர்ச்சியூட்டும் இசைப் பாடல்களைக் கேட்க மாட்டார்கள்; பண்புக்கு ஒவ்வாத செயல்களைப் போற்றமாட்டார்கள் என்று நல்ல துறவியரின் இயல்பை எடுத்துக் கூறியுள்ளார்.
தூக்கத்தால் ஏற்படும் இன்பத்தை நல்ல துறவியர் பெரிதாகக் கருதமாட்டார்கள். அதுபோன்றே அறுசுவை உணவால் அடையும் இன்பத்தையும் விரும்பமாட்டார்கள் என்றும் நீதிநெறி விளக்கத்தின் எண்பத்தைந்தாம் பாடல் எடுத்துரைக்கிறது.
அறுசுவை உணவை மிகுதியாக உண்பதால்தான் துறவியருக்குத் தூக்கத்தால் உண்டாகும் இன்பத்தின் மேலும் பெண்களைத் தழுவுவதால் ஏற்படும் இன்பத்தின் மேலும் நாட்டம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் எளிமையான உணவைக் குறைவாக உண்ண வேண்டும் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
துறவற நெறியில் சிறந்து விளங்குபவர்கள் தங்கள் உடலைப் போற்ற மாட்டார்கள்.
(என்பு = எலும்பு, புறந்தரார் = கொள்கையில் விலகமாட்டார், பொய்க்குடில் = பொய்யான உடம்பு, ஓம்புவரோ = பாதுகாக்கமாட்டார், போதத்தால் = அறிவால், புக்கில் = வீட்டில், குடிபுகுதுவார் = குடியேற விரும்புபவர்)
துறவியர் பிற உயிர்களின்பால் அன்பும் கருணையும் உடையவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் உடலைப் பாதுகாக்க விரும்பமாட்டார்கள். தங்கள் உடலைப் புலால் கொண்ட பொய்க்குடில் என்றே இகழ்வார்கள். தங்கள் உடலில் உள்ள எலும்புகள் வெளியே தெரியும்படியாக மெலிவு ஏற்பட்டாலும் உடலைப் பாதுகாக்கமாட்டார்கள். அறிவின் தெளிவாக அவர்கள் கருதும் பேரின்ப வீட்டு வாழ்க்கையையே பெரிதாகக் கருதுவார்கள் என்று துறவியரின் இயல்பை நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது.
துறவற வாழ்வைச் சரியாகப் பின்பற்றாமல் வாழ்கின்ற துறவியரைப் போலித்துறவியர் என்கிறோம்.
(புறம்பா = துறவற எண்ணம் இல்லாமல், கஞ்சுகம் = ஆடை, பிறிது = வேறானது)
மனத்தில் துறவற எண்ணம் இல்லாமல் உடலில் மட்டும் துறவறத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு வாழ்கின்றவர்கள் போலித் துறவியர். இந்தப் போலித் துறவியர் அணிந்துள்ள ஆடைகளால் அவர்களின் எந்தப் புலனையும் காக்க இயலாது. எனவே துறவற வாழ்க்கை என்பது மனத்தில் வரவேண்டிய ஒன்று என்பதைத் துறவியர் புரிந்துகொள்ள வேண்டும் என்று குமரகுருபரர் உணர்த்தியுள்ளார்.
5.7.3 புகழ் விரும்பும் துறவியர்
ஒருவன் தனது செயலைத் தானே வியந்து புகழ்தலைத் தற்புகழ்ச்சி என்கிறோம். தன்னைத்தானே புகழ்வதால் யாருக்கும் புகழ்ச்சி வந்து சேராது. ஒருவனது செயலாற்றும் திறத்தாலும் பண்பாலுமே புகழ் வந்து சேரும்.
(வியப்பிப்பான் = பாராட்ட விரும்பி, தற்புகழ்தல் = தன்னைப் புகழ்தல், நயவாமை = புகழாமை, நலம் = புகழ்)
நெருப்பைப் பெரிதாக எரியச் செய்ய வேண்டும் என்றால் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். தண்ணீரை ஊற்றினால் நெருப்பு எரியுமா? எரியாது. மாறாக அணைந்து போகும். அது போல ஒருவன் தனக்குப் புகழ் வரவேண்டும் என்று விரும்பித் தன்னைப் புகழ்ந்தால் அவனுக்குப் புகழ்ச்சி வந்து சேராது. சமுதாயத்தில் வாழ்கின்ற ஒரு மனிதனிடம் தற்புகழ்ச்சி செய்யும் இயல்பு இருந்தால்கூட ஓரளவு மன்னிக்கலாம். ஆனால் இந்தத் தற்புகழ்ச்சி இயல்பு துறவியரிடம் இருந்தால் அவர்கள் செய்யும் நல்ல செயல்களும் தீய செயல்களாகவே முடியும்.
(விலக்கிய ஓம்பி = விலக்கியவற்றைச் செய்யாமல், நலத்தகையார் = துறவியர், தம்பாடு தம்மில் கொளின் = தமது துறவின் பெருமையை எண்ணினால்)
என்னும் நீதிநெறிவிளக்கப் பாடல், துறவியரின் தற்புகழ்ச்சியால் வரும் இழிவை விளக்குகிறது.
துறவோர் செய்யக்கூடாது என்று ஒதுக்கியவற்றை ஒதுக்கி, செய்யவேண்டும் என்று விதித்தவற்றைச் செய்வதே துறவியரின் இயல்பு. அத்தகைய துறவியர் ‘ஐம்புலனையும் வென்றுவிட்டோம்’ என்று ஆணவம் கொண்டு தமது துறவின் பெருமையை எண்ணினால் அவர்கள் செய்யும் நற்செயல்களும் தீய செயல்களாகிவிடும் என்று துறவியருக்குக் குமரகுருபரர் உணர்த்தியுள்ளார்.