Primary tabs
- பாடம் - 6C01226 நன்னெறிஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பிற்கால அறநூல்களில் ஒன்றான நன்னெறி சிவப்பிரகாசர் இயற்றியதாகும். மனித வாழ்க்கைக்குத் தேவையான நல்வழிகளைக் காட்டுகிறது. நட்பு, இன்சொல் பேசுவதன் சிறப்பு, கல்வியின் மேன்மை, அறிஞர்களின் உயர்வு, பெரியோர் பெருமை, உதவிசெய்து வாழ்வதன் சிறப்பு, ஆணவம் கூடாது முதலிய அறிவுரைகளைத் தெளிவுபடுத்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
நன்னெறியை இயற்றிய சிவப்பிரகாசரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.
-
நண்பர்களாகச் சேர்ந்தவர்கள் தங்கள் நட்பில் பிரிவு ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறியலாம்.
-
இனிய சொல் பேசுகிறவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள் என்ற உண்மையை உணரலாம்.
-
கல்வி கற்றவர்கள் பண்பாளர்களாக இருப்பார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவே இயற்கை அணிகலனாக இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளமுடியும்.
-
நேருக்கு நேர் புகழும் புகழ்ச்சியைக் கண்டு மயங்காமல், பெரியோர்கள் எல்லோருக்கும் உதவுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் என்னும் பண்பை அறியலாம்.
-
கல்வியோ செல்வமோ மிகுதியாக இருந்தாலும் ஆணவம் கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொண்டு அடக்கத்துடன் வாழலாம்.
-