தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01222.htm-ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும்

 • பாடம் - 2
  C01222 ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும்
  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  ஒளவையாரைப் பற்றிய சுவையான செய்திகளைத் தெரிவிக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பில் உள்ள அறநூல்களுக்குப் பிறகு வந்த அறநூல்களில் ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் கூறும் அறக்கருத்துகளை இப்பாடம் தெரிவிக்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • ஒளவையாரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • ஒளவையார் தமது சொல்லாற்றலால் பாடிய பாடல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

  • கல்வியின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

  • ஒழுக்க வாழ்க்கையின் மேம்பாட்டை அறிந்து கொள்ளலாம்.

  • ஈகைப் பண்பின் பெருமைகளை உணரலாம். போரால் மனித சமுதாயம் அடையும் இன்னல்களை அறிந்து கொள்ளலாம்.

  • முயற்சியே வெற்றிக்கு அடிப்படை என்னும் அறிவைப் பெற முடியும்.

  • உழவுத் தொழிலின் உயர்வைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

  • இல்வாழ்க்கையின் பயன்களில் விருந்தோம்பலும் ஒன்று என்பதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:16:47(இந்திய நேரம்)