தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012221.htm-ஒளவையார்

  • 2.1 ஔவையார்

    ஔவையார் என்னும் பெயரில் பல புலவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர். சங்க காலத்தில் ஓர் ஔவையார் வாழ்ந்து இலக்கியம் படைத்ததாகவும் அதற்குப் பின்பு பக்தி இலக்கிய காலத்தில் ஓர் ஔவையார் வாழ்ந்து இலக்கியம் படைத்ததாகவும் அதன்பின்பு ஆத்திசூடி முதலிய இலக்கியங்களைப் படைத்த ஔவையார் வாழ்ந்ததாகவும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சில அறிஞர்கள், ஔவையார் நால்வர் இருந்ததாகவும், அவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாகவும் கருதுகின்றனர்.

    ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியவற்றைப் பாடிய ஔவையார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இந்த ஔவையாரே மக்களால் நன்கு அறியப்பட்ட ஔவையார் ஆவார். ஔவையார் என்னும் சொல்லுக்கு வயது முதிர்ந்த பெண் என்பது பொருள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:16:53(இந்திய நேரம்)