தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 3.7 தொகுப்புரை

  நண்பர்களே! இதுவரை படித்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

  தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய வகையாகக் குறவஞ்சி இலக்கியம் உள்ளது.

  குறவஞ்சி என்ற இலக்கியம் இப்பெயர் பெற்றதன் காரணம் தெரிய வருகிறது.

  குறவஞ்சி இலக்கியம் தோன்றுவதற்கான கருத்துகளை அறிய முடிகின்றது.

  குறவஞ்சி இலக்கிய வகையின் அமைப்பையும் பாடு பொருளையும் அறிய முடிகிறது.

  குறவஞ்சி இலக்கிய வகையில் இலக்கிய நயம், கற்பனைத் திறன், ஓசை நயம் முதலியனவற்றை உணர முடிகிறது.

  1.

  திரிகூட நாதரின் உலாவைக் கண்ட பெண்கள் திரிகூட நாதரை யார் என்று எண்ணி ஐயம் கொள்கின்றனர்?

  2.

  குற்றாலக் குறவஞ்சி நூலில் இடம்பெறும் தலைவியின் பெயர் யாது?

  3.

  உலாவைக் காணவரும் வசந்தவல்லி விளையாடிய விளையாட்டு யாது?

  4.

  குறத்தியின் கணவன் பெயர் யாது?

  5.

  சிங்கன் கூறும் பறவைகளின் பெயர்களில் சிலவற்றைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 15:51:44(இந்திய நேரம்)