Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும். எகரம் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும்.
எடுத்துக்காட்டு : பல, பலா, கனி, தீ, உழு, பூ, சேஎ, அங்கே, கலை, நொ, உறவோ, கௌ.