தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 8)

    பகுபத உறுப்புகளுள் விகாரம் தோன்றுவதை விளக்குக.

    பகுபத உறுப்புகளுள் விகாரம் என்பது தனிஉறுப்பு இல்லை. இது பகுதியும் சந்தியும் மாற்றம் அடைவதால் வருவதாகும். ஒரு பகுபதத்தில் பகுதி மட்டும் மாற்றம் பெற்று வரலாம். பகுதியும் சந்தியும் ஒரு பகுபதத்திலேயே விகாரம் அடைதலும் உண்டு.

    (1) பகுதி மட்டும் மாற்றம் அடைதல் கண்டான் - காண்+ட்+ஆன் காண் எனும்பகுதி ‘கண்‘ எனக் குறுகியது.

    (2) பகுதியும் சந்தியும் மாற்றம் அடைதல் வந்தான் - வா+த்+த்+ஆன் வா - எனும் பகுதி ‘வ‘ எனக் குறுகியும் த் - எனும் சந்தி ‘ந்‘ எனத் திரிந்தும் விகாரம் அடைந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 12:49:17(இந்திய நேரம்)